சத்தான கம்பு உருண்டை

Loading...

%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88
தேவையான பொருட்கள் :

கம்பு – 1/2 கிலோ
கருப்பட்டி – 1/2 கிலோ
வறுத்த வேர்க்கடலை – 50 கிராம்.


செய்முறை :

* கம்பை நன்றாக இடித்துக்கொள்ளவும்.
* வறுத்த வேர்க்கடலையைச் சிறு துண்டுகளாக உடையும் அளவுக்கு இடித்துக்கொள்ளவும்.
* கருப்பட்டியுடன் தண்ணீரைச் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
* கம்பு மாவையும், உடைத்த வேர்க்கடலையையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
* கருப்பட்டிபாகை, கம்பு மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்க்க வேண்டும். ஏனெனில், கருப்பட்டிபாகின் சூடு குறைந்தால், உருண்டை பிடிக்க வராது. கருப்பட்டிபாகினை அடுப்பில் லேசாகச் சூடு செய்துகொண்டே, சிறிது சிறிதாகச் சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும்.
* சுவையான சத்தான கம்பு உருண்டை ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply