இரவில் வாழைப்பழம் ஆப்பிள் சாப்பிடாதீங்க! ஏனென்றால் இன்னும் பல பயனுள்ள தகவல்களுடன்

Loading...

%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் உணவு விடயங்களில் பலரும் சரியான அக்கறை கொள்வதில்லை. எந்த உணவுகளை எடுத்து கொண்டாலும் அதற்கான நேரத்தில் அதை சாப்பிட்டால் அது உடலுக்கு நல்லது செய்யும்.

அதையே தவறான வேளையில் எந்தவொரு உணவை சாப்பிட்டாலும் அது உடலுக்கு கேடு விளைவித்து விடும்.
சரி, மக்கள் அதிகம் உண்ணும் சில உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடலாம் மற்றும் சாப்பிடக்கூடாது என பார்ப்போம்

வாழைப்பழம்

வாழைப்பழங்களை மதிய உணவு நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வாழைப்பழங்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடலில் சளி சேருவதுடன், செரிமான பிரச்சனையும் உண்டாகும்

ஆப்பிள்

ஆப்பிள் பழங்களை காலை சிற்றுண்டி வேளையில் சாப்பிட்டால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பின் அளவையும் குறைக்க உதவும்.
ஆப்பிளில் பெக்டின் என்னும் பசை சத்து உள்ளது. இதனால் இதை இரவு டின்னர் நேரத்தில் சாப்பிட்டால் வயிற்று உப்புசம் தொல்லை ஏற்படும்.

உருளைக்கிழங்கு

உருளையில் கனிமசத்து அதிகம் உள்ளதால் இதை காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் கொழுப்பின் அளவு குறையும்.
இதையே இரவு சாப்பிட்டால் அதில் இருக்கும் கலோரிகள் உடல் எடையை அதிகரிக்க செய்து விடும்.

பால்

மிதமான சூட்டில் இருக்கும் ஆறிய பாலை இரவு நேரத்தில் அருந்தினால் அது உடல் மென்மையை அதிகரிக்க செய்து இரவில் நல்ல தூக்கத்தை உடலுக்கு தரும்.
காலையில் உடலுக்கு அசதி தரும் எந்தவொரு வேலையும் செய்யாமல் பால் அருந்தினால் அது வயிற்று செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.

பாதம், பிஸ்தா போன்ற பருப்புகள்

முந்திரி, பாதம், பிஸ்தா போன்ற பருப்புகளை மதிய உணவு வேளையில் சாப்பிட்டால் உடலில் இரத்த கொதிப்பை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும்.
இதையே இரவு நேர டின்னருக்கு பின்னர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஆரஞ்சு பழம்

மாலை வேளையில் இதை சாப்பிட்டால் செரிமான திறனும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ஆரஞ்சு பழங்களை காலை சிற்றுண்டியுடன் சாப்பிடகூடாது. ஏனென்றால் அது வயிறு எரிச்சல், இரைப்பை அழிற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அரிசி சாதம்

அரிசியால் வடித்த சாதத்தை மதிய உணவு வேளையில் சாப்பிட்டால் அதில் இருக்கும் கார்போஹைட்டேட்ஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
இரவு டின்னரில் அரிசி சாப்பாட்டை சாப்பிட்டால் எடை அதிக அளவில் கூடும்.

சொக்லேட்

நல்ல தரம் வாய்ந்த சாக்லேட்டுகளை காலை சிற்றுண்டி சமயத்தில் சாப்பிட்டால் அதில் இருக்கும் வேதிபொருளானது இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
மாலை ஸ்னாக்ஸ் வேளையில் சொக்லேட்டுகளை சாப்பிட்டால் உடல் கொழுப்பை அதிகரிக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply