ஆன்லைனில் டெபிட் கார்ட் பின் நம்பரை மாற்றுவது இப்படி தான்

Loading...

%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8dதகவல் திருட்டு மூலம் பாதிக்கப்படாமல் இருக்கப் பயனர்கள் அடிக்கடி டெபிட் கார்டு பாஸ்வேர்டினை மாற்றுவது அவசியம் ஆகும்.


ஐசிஐசிஐ பேங்க்:

முதலில் ஐசிஐசிஐ பேங்க் நெட்பேங்கிங் அக்கவுண்ட் லாக் இன் செய்ய வேண்டும். My Card Pin ஆப்ஷனினை தேர்வு செய்து டெபிட் கார்டு பின் மாற்றக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பயன்பாட்டில் இருக்கும் டெபிட் கார்டினை தேர்வு செய்து கார்டின் CVV நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் அனுப்பப்படும் OTP பதிவு செய்து அடுத்தப் பக்கத்தில் புதிய பின் கோடினை தேர்வு செய்து submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


எச்டிஎஃப்சி பேங்க்:

நெட்பேங்கிங் அக்கவுண்ட் லாக் இன் செய்து Cards ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், இடது புறத்தில் கீழ் பக்கமாக ஸ்கிரால் செய்து ‘Request’ பட்டனினை கிளிக் செய்ய வேண்டும்.

Instant PIN Generation ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். இப்பக்கத்தில் கேட்கப்படும் ஆப்ஷன்களைப் பூர்த்திச் செய்து புதிய பின் நம்பரை பதிவு செய்து உங்களது மொபைல் போனிற்கு அனுப்பப்பட்ட OTP பதிவு செய்ய வேண்டும்.


ஆக்சிஸ் பேங்க்:

ஆக்சிஸ் பேங்க் நெட்பேங்கிங் லாக் இன் செய்து இடது புறத்தின் மேல் பக்கம் இருக்கும் My Debit Cards ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

இங்கு பயன்படுத்தும் டெபிட் கார்டினை தேர்வு செய்து More Services, ஆப்ஷனில் Set Debit Card Pin கிளிக் செய்து Go என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

பின் நம்பரை மாற்ற புதிய பின் கார்டு பயன்பாடு நிறைவடையும் தேதி மற்றும் மொபைல் போனிற்கு அனுப்பப்பட்ட NETSecure கோடு ஆகியவற்றை என்டர் செய்ய வேண்டும்.


எஸ் பேங்க்:

எஸ் பேங்க் அக்கவுண்ட் பதிவு செய்து mySPACE ஆப்ஷனினை கிளிக் செய்து அதில் இருக்கும் நான்காவது பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

மூன்றாவது ஆப்ஷனாக Debit Card PIN Re-generation/ Change காணப்படும். இதனைக் கிளிக் செய்ய வேண்டும்.

கார்டு பயன்பாடு நிறைவு பெரும் தேதி மற்றும் புதிய பின் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். இரு முறை புதிய பின் பதிவு செய்ததும் புதிய திரை காணப்படும்.

இந்தத் திரையினை உறுதி செய்ததும் OTP பக்கம் திறக்கும், இங்கு மொபைல் போனிற்கு அனுப்பப்பட்ட OTP பதிவு செய்ய வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply