Allo Duo செயலிகளைக் களமிறக்கியுள்ள Google

Loading...

allo-duo-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%81Facebook, Whatsuo இற்கு போட்டியாக ‘Allo’, ‘Duo’ என இரு செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இரண்டே செயலிகள் Facebook, Whatsup என வைத்துக்கொண்டு மொத்த உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியவில்லை.

செய்திச் செயலியான ‘Allo’வில் ,தற்போது Whatsup இல் இருக்கும் செய்திகளைப் பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் செய்திகளுக்கு தானாக பதில் அளிக்கும் (auto reply) வசதிகளும் உள்ளன. இதன் மூலம் நாம் பதில் சொல்ல தட்டச்சுச் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு திரையில் தெரிவாகக் காட்டும்.

மிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான வீடியோ அழைப்புக்கள் செய்ய உதவுவதே Duo செயலியின் மிகப்பெரிய பலம். பிற செயலிகளைப் போல் அழைப்புச் செய்து சிறிது நேரம் கழித்து லோட் ஆகாமல், உடனுக்குடனேயே அழைப்புக்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ அழைப்புச் செயலிகளில் Duo ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு செயலிகளும் அன்ரொயிட் மற்றும் ஐ-ஓஸ் இயங்கு தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சூக்கர்பெர்க்கின் யோசனைகளைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க முடியுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்

Loading...
Rates : 0
VTST BN