4 டோர் மஹிந்திரா ரேவா e2o ஸ்பை படங்கள் அறிமுக தேதி வெளியாகியது

Loading...

4-%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b0%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-e2o-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%884 டோர்கள் கொண்ட மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள் மற்றும் அறிமுக தேதி விவரங்கள் வெளியாகியது. மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் மஹிந்திரா ரேவா e2o, எலக்ட்ரிக் கார் துறையில், முன்னோடியில் உள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார் புரட்சி கொண்டு வருவதில் மஹிந்திரா நிறுவனத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. எலக்ட்ரிக் கார்கள் சில ஆண்டுகளாகவே மக்களிடம் பிரபலமாகி வருகிறது. புதிய மஹிந்திரா ரேவா எலக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
ஸ்பை படங்கள்;
மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரின் சோதனைகள் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. அப்போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
4 டோர்கள்;
சமீபத்தில், ஸ்பை படங்கள் வெளியாகிய மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் கார், 4 டோர்கள் கொண்ட வேரியன்ட்டாக உள்ளது கூடுதல் பரபரப்பிற்கு காரணமாக உள்ளது. 4 டோர்கள் கொண்ட மஹிந்திரா ரேவா e2o, நீண்ட காலமாக வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில், 4 டோர்கள் உடைய மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரின் சோதனைகள் நடைபெறுவதை பார்த்தால், இது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய மாற்றம்;
சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரில் மிக முக்கியமான மாற்றமாக விளங்குவது இதன் சார்ஜிங் பாயின்ட் பொருத்தபட்டுள்ள இடம் தான். இதன் சார்ஜிங் பாயின்ட், முன்பு இருந்த இடத்தை தவிர்த்து வேறு ஒரு புதிய இடத்தில் பொருத்தபட்டுள்ளது. இதன் சார்ஜிங் பாயின்ட், காரின் பக்கவாட்டில் பொருத்தபட்டுள்ளது. மேலும், சோதனை செய்யபட்ட இந்த மாடல், அகலமான டயர்கள் கொண்டதாக உள்ளது.
2 டோர்கள்;
2 டோர்கள் கொண்ட மஹிந்திரா ரேவா e2o, 48 வோல்ட் லித்தியம்-இயான் பேட்டரி பேக் கொணடுள்ளது. இதன் பேட்டரி பேக், மோட்டாருடன் இணைக்கபட்டிருக்கும். 2 டோர்கள் கொண்ட மஹிந்திரா ரேவா e2o, 25.4 பிஹெச்பியையும், 53.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
கியர்பாக்ஸ்;
2 டோர்கள் கொண்ட மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரின் பவர், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் வீல்களுக்கு கடத்தப்படுகிறது.
உச்சபட்ச வேகம்;
2 டோர்கள் உடைய மஹிந்திரா ரேவா e2o, ஒரு மணி நேரத்திற்கு அதிகப்படியாக 81 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.
செயல் திறன்;
இதன் பேட்டரியை ஒரு முறை முழு கொள்ளளவுக்கு சார்ஜ் செய்தால், 2 டோர்கள் கொண்ட மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரில் 120 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.
சார்ஜிங் நேரம்;
மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரின் 2 டோர் வேரியன்ட்டை, ஸ்டாண்டர்ட் 220V 15 A சாக்கெட் மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். இதன் இடையில், ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் செய்தாலும் கூட, 20 கிலோமீட்டர் என்ற அளவில் இதன் ரேஞ்ச்சை கூட்ட முடியும்.
பவர் அதிகரிப்பு;
மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரில், தற்போது கூடுதலாக 2 டோர்கள் (புதிய வேரியன்ட் 4 டோர்கள் கொண்டுள்ளது) சேர்க்கபட்டுள்ள நிலையில், அதற்குஏற்றவாறு, இதன் பவரும் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுகம்;
டோர்கள் கொண்ட மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் கார், இந்த ஆண்டின் ஆக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply