2018 ஹோண்டா சிஆர்-வி ஸ்பை படங்கள் வெளியாகியது

Loading...

2018-%e0%ae%b9%e0%af%8b%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8dஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் 2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது. 2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி குறித்த கூடுதல் விவரங்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி
2018 ஹோண்டா சிஆர்-வி, ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் தயாரித்து வரும் எஸ்யூவி ஆகும். இது பிரிமியம் எஸ்யூவியாக வடிவமைக்கப்பட்து வருகிறது.
ஸ்பை படங்கள்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியின் சோதனைகள், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மொஜாவே பாலைவனத்தில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. பலத்த உருமறைப்பு செய்யப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால், அதிக அளவிலான தகவல்கள் தெரியாமல் உள்ளன.
இந்தியாவிலும் அறிமுகம்; 2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியை, இந்தியாவிலும் அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அறிமுகம்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி, இந்தியாவில் 2017 இறுதி அல்லது 2018 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாற்றங்கள்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியில் பல்வேறு சிறிய சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. 2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி, பெரும்பாலான சந்தைகளுக்கு மேம்படுத்தப்பட்டு வழங்கப்படும்.
இஞ்ஜின்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி, 1.8-லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கும். மேலும், தேர்வு முறையிலான 1.6-லிட்டர் ஐ-டிடெக் டீசல் இஞ்ஜினுடனும் வெளியாகலாம்.
கியர்பாக்ஸ்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியின் 2 இஞ்ஜின்களும், தேர்வு முறையிலான 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுடனும் வெளியாகலாம்.
போட்டி;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி, ஹூண்டாய் சான்ட்டா பீ, டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி5OO ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.
விலை;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி, சுமார் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply