2017 ரியோ ஹேட்ச்பேக்கின் படங்கள் மற்றும் டீசர் வெளியாகியது

Loading...

2017-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%b9%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99கியா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த தலைமுறை 2017 ரியோ ஹேட்ச்பேக்கின் படங்கள் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம், ரியோ ஹேட்ச்பேக் உள்ளிட்ட ஏராளமான கார்களை தயாரித்து வழங்குகிறது. சமீபத்தில் தான், 2017 ரியோ ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்கள் வெளியாகின. இதையடுத்து, 2017 ரியோ ஹேட்ச்பேக்கின் அலுவல் ரீதியான டீசரை கியா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த 2017 ரியோ ஹேட்ச்பேக், ஆக்ரோஷமான ஸ்டைல் மற்றும் கூடுதல் அளவிலான வீல்கள் கொண்டுள்ளது. 2017 ரியோ ஹேட்ச்பேக் தொடர்பான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

தோற்றம்;
2017 ரியோ ஹேட்ச்பேக், முந்தைய மாடலை காட்டிலும் சற்று வித்தியாசமாக உள்ளது. இந்த புதிய மாடல் மிகவும் அம்சமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் ஜெர்மனியில் உள்ள டிசைன் குழுவும், தென் கொரியாவின் நேம்யாங்க் என்ற இடத்தில் இருந்து இந்த காருக்காக பணியாற்றும் பேஸ் டீம் தான் என்றால் அது மிகையாகாது.

புதுப்பொலிவு;
எக்ஸ்டீரியர் மட்டும் அல்ல, 2017 ரியோ ஹேட்ச்பேக்கின் இன்டீரியருக்கும் புதுப்பொலிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், இந்த மாடலின் தீவிரமான மார்கெட்டிங் செய்யப்படலாம் என தெரிகிறது.

பிரபலமான மாடல்;
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மாடல்களில், ரியோ ஹேட்ச்பேக் உலக அளவில் சிறந்த முறையில் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், ரியோ ஹேட்ச்பேக் மாடலில் 4,73,000 கார்கள் விற்பனையாகியுள்ளது.

தொழில்நுட்ப விவரங்கள்;
2017 ரியோ ஹேட்ச்பேக்கின் தொழில்நுட்ப விவரங்கள் அவ்வளவாக வெளியாகவில்லை. ஆனால், தற்போதைய மாடளை காட்டிலும், 2017 ரியோ ஹேட்ச்பேக்கின் வீல் பேஸ் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 2017 ரியோ ஹேட்ச்பேக், பயணியர்களுக்கு அதிக இடம் வசதி கொண்டதாக இருக்கும். மேலும், 2017 ரியோ ஹேட்ச்பேக், பல்வேறு விதமான கனக்ட்டிவிட்டி வசதிகள் கொண்டிருக்கும்.

கூறுகள்;
2017 ரியோ ஹேட்ச்பேக்கின் அதிகப்படியான கூறுகள், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 மாடலில் இருந்து ஏற்கப்பட்டுள்ளது. 2017 ரியோ ஹேட்ச்பேக், 3 சிலிண்டர்கள் உடைய 1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்தன் இஞ்ஜின், 100 பிஹெச்பி மற்றும் 120 பிஹெச்பி 2 தேர்வுகளுடன் கிடைக்கிறது.

அறிமுகம்;
2017 ரியோ ஹேட்ச்பேக், முதன் முறையாக இந்த ஆண்டு நடைபெறும் பேரிஸ் மோட்டார் ஷோவில், செப்டம்பர் 29-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply