2017 முதல், இந்தியாவில் பிஎஸ் – 4 தரம் கொண்ட எரிபொருள் மட்டுமே கிடைக்கும்

Loading...

2017-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8dதெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் என்று பாட்டுக்கொரு பாரதி பாடிச் சென்றான். ஆனால், இப்போது நிலைமை எப்படியிருக்கிறது? தெருவெல்லாம் புகை மூட்டம் செழிக்கச் செய்யும் வேலையில் தான் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். புகையை உமிழும் வாகனங்களைத் தான் நாம் சாலைகளில் அன்றாடம் பார்க்கிறோம். வாகனங்கள் மூலமாக காற்றில் கலக்கும் மாசினால் ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கானோர் நோய்வாய்ப்படுவதாகவும், பலர் உயிரிழப்பதாகவும் கூறுகிறது ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட். காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாடு விதிகள்தான் இதற்கு முன்னர் நம் நாட்டில் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாரத ஸ்டேண்டர்டு மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் வகுக்கப்பட்டன. அதில் பிஎஸ் – 4 எனப்படும் மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டம் முதல் கட்டமாக சில நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் அந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பிஎஸ் – 4 விதிகளுக்குட்பட்ட தரத்தில் அமைந்த பெட்ரோல், டீசல் மட்டுமே நாடு முழுவதும் விற்பனை செய்ய முடியும். மாசு அதிகமாக வெளியேற்றாத வகையில் சுத்திகரிக்கப்பட் எரிபொருள்களாக அவை இருக்கும். சல்பர் அளவு அவற்றில் குறிப்பிட்ட விகிதத்தில் மட்டுமே இருக்கும். மேலும் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையிலான சேர்மங்கள் மட்டுமே பிஎஸ் – 4 பெட்ரோல், டீசலில் இருக்கும். இதுகுறித்து மக்களவையில் அண்மையில் விளக்கமளித்த மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) தர்மேந்திர பிரதான், இந்தத் தகவலைத் தெரிவித்தார். ஏற்கெனவே முதல் கட்டமாக இந்தத் திட்டம் ஜம்மு – காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளிலும் கடந்த 2010-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேரளம், கர்நாடகம், ஒடிஸா, கோவா, தெலங்கானா, மகாரஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் இந்த பிஎஸ் – 4 எரிபொருள் விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பெட்ரோலியப் பொருள்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2005-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் ஒழித்துவிடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் 2.8 கோடி பழைய வாகனங்கள் இனி சாலையில் புகையைக் கக்க முடியாது. அந்த வாகனங்களை ஒப்படைத்துவிட்டு அதற்கு உரிய இழப்பீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி தெரிவித்தார். நம்மைச் சுற்றியுள்ள இந்த புற உலகு இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும் என்றால் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் அவசியம் தான்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply