2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்கார் அறிமுகம்

Loading...

2017-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%9a%e0%af%82நிஸான் மோட்டார் நிறுவனம், தங்களின் 2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்காரை அறிமுகம் செய்துள்ளனர். ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம் இந்த நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்காரை தயாரித்து அளிக்கிறது.
2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்கார் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ…


நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ…

2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்கார், பிரத்யேகமான ஸ்டைல் அம்சங்கள் கொண்டுள்ளது.
இதன் ஸ்டைலிங் ரேசிங் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.தொழில்நுட்பம்;

2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்கார், மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரபாவம் கொண்ட தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது.
ஆக்டிவ் ஏரோ டைனமிக்ஸ், ஸ்பெஷல் சஸ்பென்ஷன் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், 2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்காரை, சாலைகளிலும், டிராக்குகளிலும் பட்டையை கிளப்பும் காட்ஸில்லா போல் இயங்க உதவுகிறது.


முன் தோற்றம்;

2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்காரின் முன் பக்கத்தில் உள்ள புதிய கார்பன் ஃபைபர் மற்றும் கனார்டுகள் மேம்பட்ட ஏரோடைனமிக்ஸ் வழங்கும் வகையில் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.


இஞ்ஜின்;

2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்காருக்கு, VR38DETT என்ற இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது. இந்த இஞ்ஜின் அசாதாரணமான 592 பிஹெச்பியை வெளிப்படுத்துகிறது.


கியர்பாக்ஸ்;

2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்காரின் இஞ்ஜின் 6-ஸ்பீட் ட்வின் கிளட்ச் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜிடி3 போட்டியில் உபயோகிக்கப்படும் அதிக விட்டம் கொண்ட டர்போசார்ஜர்கள் இந்த 2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்காரிலும் பயன்படுத்தப்படுகிறது.


இஞ்ஜின் குளிர்ச்சி;

2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்கார், மிக உயரிய திறன் உடைய இஞ்ஜின் கொண்டுள்ளது.
2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்காரில் உள்ள பெரியாதாக்கப்பட்ட ‘வி-மோஷன்’ கிரில், புதிய மெஷ் போன்ற பேட்டர்ன் இஞ்ஜினுக்கு மேம்பட்ட கூலிங் வழங்குகிறது.
ஒட்டுமொத்தத்தில், 2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்கார் தான், இது வரை உருவாக்கப்பட்ட சூப்பர்கார் மாடல்களிலேயே மிகவும் அதிகமான திறனை வெளிப்படுத்துகிறது.


சஸ்பென்ஷன்;

2017 நிஸான் ஜிடிஆர் நிஸ்மோ சூப்பர்கார், ஸ்பெஷலான பில்ஸ்டைன் டேம்ப்டிரானிக் சஸ்பென்ஷன் சிஸ்டம் (Bilstein DampTronic suspension system) கொண்டுள்ளது.
இந்த சஸ்பென்ஷன் சிஸ்டம், இந்த வாகனத்தின் பல்வேறு வகையிலான தகவல்களை திரட்டி, வெவ்வேறு விதமான டிரைவிங் சூழ்நிலைகளுக்கு தேவையான உயர் ரக கண்ட்ரோலை வழங்குகிறது.


மற்றொரு மாடல்;

இதோடு மட்டுமல்லாமல், நிஸான் நிறுவனம், கடந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிராக் எடிஷன் இஞ்ஜினியர்ட் பை நிஸ்மோ (“Track edition engineered by NISMO,”) என்ற மாடலையும் விற்பனை செய்து வருகின்றனர்.
டிராக் எடிஷன் இஞ்ஜினியர்ட் பை நிஸ்மோ என்பது ஸ்பேஷல் எடிஷன் மாடல் ஆகும்.
டிராக் எடிஷன் இஞ்ஜினியர்ட் பை நிஸ்மோ என்ற இந்த மாடல், ஜிடிஆர் ஸ்டாண்டர்ட் மாடலின் உரு மற்றும் விவரக்குறிப்புகளுடன், நிஸான் ஜிடிஆர் நிஸ்மோவின் ஸ்டரக்ச்சர் மற்றும் சஸ்பென்ஷனுடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட கலவையாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply