2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான் அறிமுகம்

Loading...

2017-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%86%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bfடொயோட்டா நிறுவனம் வழங்கும் பொலிவு கூட்டப்பட்ட 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான், 2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது. 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்…
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம், தங்களின் மிகவும் புகழ்பெற்ற எக்சிகியூட்டிவ் மாடலான கரொல்லா ஆல்டிஸ் செடானின் பொலிவு கூட்டப்பட்ட வடிவத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர். 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானின் படங்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் அறிமுகம்;
ஆட்டோகார் இதழ் வெளியிட்ட தகவல்களின் படி, இந்த பொலிவு கூட்டப்பட்ட 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான், இந்தியாவில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் வெளியாகிறது.
விற்பனையில் முன்னோடி;
டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான், அதற்கு நெருங்கிய போட்டி மாடலான ஸ்கோடா ஆக்டேவியா-வை காட்டிலும் கூடுதலாக விற்பனையாகி வருகிறது. டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான் 2.5 என்ற மார்ஜின் அளவில் விற்பனை செய்யப்படும் போது, அதன் போட்டி மாடலான ஸ்கோடா ஆக்டேவியா 1.0 என்ற மார்ஜின் அளவில் தான் விற்பனை செய்யப்படுகிறது. கரொல்லா பிரான்ட் மீது இந்திய வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
கரொல்லா ஆல்டிஸ் அறிமுகம்;
டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான், முதன் முதலாக 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இதன் எட்ஜி டிசைன் காரணமாக, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. தோற்றம்; தற்போதைய கரொல்லா ஆல்டிஸ் செடானை காட்டிலும், 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானின் தோற்றம் கூர்மையாக உள்ளது. கூடுதல் கூர்மையுடன் காணப்படும் முன் பக்க கிரில், மேலும் கூர்மையாக்கப்பட்ட ஆங்குளார் ஹெட்லைட்கள் மற்றும் புதிதாக சேர்க்கபட்டுள்ள டேடைம் ரன்னிங் லைட் ஸ்ட்ரிப் ஆகியவை கவனிக்க வேண்டிய அம்சங்களாக உள்ளன.
முன் தோற்றம்;
2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானின் முன் பம்பர், மேலும் ஆங்குளார் தோற்றம் கொண்டுள்ளது. இந்த முன் பம்பரின் மத்தியில் பெரிய ஏர் டேம் மற்றும் முன் பம்பரின் 2 பக்கத்திலும் ஃபாக் லேம்ப்களை தாங்கி கொண்டிருக்கும் கட் அவுட்களை கொண்டுள்ளது.
பின் தோற்றம்;
2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானின் பின் பகுதியிலும், இதன் டெயில் லேம்ப்கள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்;
பொலிவு கூட்டப்பட்ட 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் 4.2 இஞ்ச் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே மற்றும் புதிய 7-இஞ்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகிய பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது.
இஞ்ஜின்;
பொலிவு கூட்டப்பட்ட 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானில், முந்தைய மாடலில் உபயோகிக்கப்பட்டு வரும் அதே 1.8-லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3-லிட்டர் டீசல் இஞ்ஜின் உபயோகிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
கியர்பாக்ஸ்;
புதிய 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானின், 2 இஞ்ஜின்களும், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படும்.
விலை;
புதிய 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான், தற்போதைய சுமார் 14.2 லட்சம் ரூபாய் முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply