1 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் புக்கிங் துவங்கியது

Loading...

1-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9ரெனோ நிறுவனம் தயாரிக்கும் 1 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட் ஹேட்ச்பேக் ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்படும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரெனோ டீலர்ஷிப்கள், 1 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் மாடளுக்கான புக்கிங்கை துவக்கிவிட்டனர். ரெனோ க்விட் ஹேட்ச்பேக், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம் தயாரித்து வழங்கும் மாடல் ஆகும்.
ரெனோ க்விட், இந்திய வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
1 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் மற்றும் அதன் புக்கிங் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

1,000 சிசி இஞ்ஜின் உடைய க்விட்…

1,000 சிசி பெட்ரோல் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது காட்சிபடுத்தப்பட்டது.
800 சிசி பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட், நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால், உற்சாகம் பெற்ற ரெனோ நிறுவனம், 1,000 சிசி பெட்ரோல் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


புக்கிங்;

1,000 சிசி பெட்ரோல் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கின் புக்கிங் இந்தியா முழுவதும் துவங்கிவிட்டது.
10,000 ரூபாய் என்ற டோக்கன் புக்கிங் கட்டணத்துடன், ரெனோ ஷோரூம்கள், இந்த ரெனோ க்விட்டுக்கான புக்கிங்கை ஏற்று கொள்கின்றனர்.
இதன் டெலிவரி, வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அறிமுகம்;

1,000 சிசி பெட்ரோல் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் ஹேட்ச்பேக், ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.


விலை விவரங்கள்;

1,000 சிசி பெட்ரோல் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டின் விலை விவரங்கள், அலுவல் ரீதியாக இது வரை வெளியிடப்படவில்லை.
ஆனால், இந்த ரெனோ க்விட், மிகுந்த சவாலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.


தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரிம்கள்;

1,000 சிசி பெட்ரோல் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரிம்களில் மட்டுமே கிடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இஞ்ஜின்;

3-சிலின்டர்கள் கொண்ட 1,000 சிசி பெட்ரோல் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், 70 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.


கியர்பாக்ஸ்;

1,000 சிசி பெட்ரோல் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் உடைய மாடல், வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்படும்.


வண்ண தேர்வுகள்;

1,000 சிசி இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், புதிய பெயின்ட் ஸ்கீம்களிலும், புதிய நிற தேர்வுகளிலும் கிடைக்கும்.


இதர அம்சங்கள்;

இந்த 1,000 சிசி பெட்ரோல் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டை, பிற மாடல்களில் இருந்து வேறுபடுத்தி காட்ட, இதற்கு புதிய அல்லாய் வீல்கள் பொறுத்தப்பட்டிருக்கும்.
மேலும், இதன் கேபினில் பல்வேறு புதிய சொகுசு அம்சங்கள் சேர்க்கப்படும்.


போட்டி;

1,000 சிசி இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், ஆல்ட்டோ கே10, செலெரியோ, வேகன் ஆர், டியாகோ மற்றும் இயான் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply