வாழைத்தண்டு பருப்பு கூட்டு

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d
தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு – 1 (ஒரு அடி நீளம்)
பயத்தம் பருப்பு – 1/2 கப்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு


தாளிக்க :

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
சாம்பார் வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காய்த்துருவல், சீரகத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* வாழைத்தண்டை வட்ட வில்லைகளாக வெட்டி, அதிலுள்ள நாரை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
* பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில், வாழைத்தண்டு துண்டுகளைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன், வாழைத்தண்டு மூழ்கும் அளவிற்கு நீரைச் சேர்த்து வேக விடவும்.
* வாழைத்தண்டு நன்றாக வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* கொதிக்கும் கூட்டில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்துக் கூட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, கடுகு, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.
* சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிட சுவையாக இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN