லூமியா கருவிகள் இவைதான்

Loading...

%e0%ae%b2%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8dமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிமுக விழா அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் குறிப்பிட்ட தேதியில் அந்நிறுவனம் புதிய லூமியா கருவிகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் லூமியா 950 மற்றும் 950 எக்ஸ்எல் கருவிகள் குறித்து பல எதிர்பார்ப்புகளும் கான்செப்ட் புகைப்படங்களும் வெளியாகின.
இங்கு புதிய மைக்ரோசாப்ட் லூமியா 950 மற்றும் 950 எக்ஸ்எல் கருவியின் கான்செப்ட் புகைப்படங்களை பாருங்கள்…

வடிவமைப்பு

புதிய மைக்ரோசாப்ட் கருவி குறித்து பல்வேறு வடிவமைப்புகள் இணையத்தை ஆக்கிரமித்திருந்தன. பெரும்பாலான வடிவமைப்புகள் முந்தைய நோக்கியா கருவிகளை சார்ந்தே இருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைகள்

இதுவரை வெளியான வதந்திகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 950 மற்றும் 950 எக்ஸ்எல் என இரு கருவிகளை வெளியடலாம் என்றும் இவற்றில் லூமியா 950 எக்ஸ்எல் கருவி பெரிதாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

டிஸ்ப்ளே

லூமியா 950 கருவியில் 5.2 இன்ச் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 2560*1440 பிக்சல்களும் லூமியா 950 எக்ஸ்எல் கருவியில் 5.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 2560*1440 பிக்சல் ரெசல்யூஷன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பிராசஸர்

லூமியா 950 கருவியானது 64-பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 808 சிப்செட் ஹெக்ஸாகோர் பிராசஸரும் லூமியா 950 எக்ஸ்எல் கருவி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் கொண்டிருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ரேம்

இரு லூமியா ஸ்மார்ட்போன்களிலும் 3 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

ஸ்டோரேஜ்

இரு லூமியா கருவிகளிலும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம்.

பேட்டரி

லூமியா 950 மற்றும் லூமியா 950 எக்ஸ்எல் கருவிகளும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூப்படலாம் என்றும் க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

கேமரா

இரு லூமியா ஸ்மார்ட்போன்களும் 20 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கலாம்.

வெளியீடு

மைக்ரோசாப்ட் நிறுவனம் இரு கருவிகளையும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் விழாவில் வெளியிடலாம் என்றும் இந்த விழாவில் அந்நிறுவனம் புதிய சர்ஃபேஸ் ப்ரோ 4 கருவியை வெளியிடலாம் என்றும் கூறப்படுகின்றது.

விலை

மைக்ரோசாப்ட் லூமியா 950 இந்தியாவில் ரூ.48,485 மற்றும் லூமியா 950 எக்ஸ்எல் ரூ.55,125 வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

Loading...
Rates : 0
VTST BN