முட்டை அவியல்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d
வேக வைத்த முட்டை – 3
உப்பு – சிறிது
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – சிறிது


மசாலாவிற்கு…

தேங்காய் – 1 கப்
வெங்காயம்-1
காய்ந்த மிளகாய்-1
மிளகு – 1 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்

எப்படிச் செய்வது?

மிக்சி ஜாரில் தேங்காய், காய்ந்த மிளகாய், வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக மசித்து வைக்கவும். அவற்றை ஒரு கடாயில் எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். வேக வைத்த முட்டையை அதில் போட்டு கலந்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை சமைக்கவும். இப்போது ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி முட்டை மசாலாவில் ஊற்றவும். சுவையான முட்டை அவியல் ரெடி.

Loading...
Rates : 0
VTST BN