முடி உதிர்வைத் தடுக்கும் கொய்யா

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8dநாம் பயன்படுத்தும் இரசாயனம் கலந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னர்களால் நம் தலைமுடி அதிகளவு உதிர்வதோடு அதிகப்படியான தீங்கும் ஏற்படுகின்றது. நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல்வேறு இயற்கை வழிமுறைகள் இருக்கின்றன. இதில் நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று தான் கொய்யா.

கொய்யா இலை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை விளைவிக்கக் கூடியது ஆகும். அனைத்து வித வைட்டமின்களும் கொய்யாவில் இருக்கின்றது. இது கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்தி முடியில் கணுக்கால்களை வலுவாக்கும்.

கொய்யாவில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. சரும பாதிப்பை சரி செய்கிறது. கூந்தலுக்கு மிளிரும் தன்மையைத் தரும்.

கை நிறையக் கொய்யா இலைகளை எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து, வடிகட்டி, அந்த நீரில் தலைமுடியை நனையுங்கள். குறிப்பாக ஸ்கால்ப்பில் தடவுங்கள். 5 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதனால், முடி உதிர்வதைத் தடுக்க முடியும்.

கொய்யா இலையை பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆலிவ் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யை சம அளவு எடுத்து, அடுப்பில் சூடேற்றுங்கள். எண்ணெய் கொதித்ததும், அடுப்பைக் குறைத்து, கொய்யா இலை பேஸ்ட்டை அதில் போடுங்கள். ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் அதில் சேர்க்க வேண்டும். நுரை தணிந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

எண்ணெய் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலை வெயிலில் 20 நிமிடம் பாட்டிலை வைக்க வேண்டும். ஒரு வாரம் கழிந்ததும் எண்ணெய்யை வடிகட்டி அந்த எண்ணெய்யை உபயோகப்படுத்துங்கள். வாரம் மூன்று முறை இந்த எண்ணெய்யை தலையில் வேர்கால்களில் அழுந்தத் தேய்த்து, மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு செய்தால், மின்னும் கூந்தல் கிடைக்கும். கூந்தல் மிக மிருதுவாக மாறும். முடி வளர்ச்சியும் அபாரமாக இருக்கும்.

கொய்யா இலை, மருதாணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து, தலையில் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலசலாம். இதனால் முடி அடர்த்தியாய் வளரும். கூந்தலுக்கும் ஊட்டச்சத்து கிடைக்கும்.

Loading...
Rates : 0
VTST BN