மிக்ஸ்டு வெஜிடபிள் பராத்தா

Loading...

%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8dகோதுமை மாவு – 2 கப்,
தக்காளி பல்ப் – 1/2 கப்,
உப்பு, தண்ணீர் – தேவைக்கு,
எண்ணெய்- 2 டீஸ்பூன்.


பூரணத்திற்கு…

வெங்காயம் – 1,
உருளைக்கிழங்கு – 1,
பீன்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
கேரட் – 2 டேபிள்ஸ்பூன்,
குடைமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்,
காலிஃப்ளவர் – 2 டேபிள்ஸ்பூன்(அனைத்தும் பொடியாக நறுக்கியது),
பட்டாணி – 2,
பனீர் – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியாதூள் – 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க…

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு, தக்காளி பல்ப், எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். கடாயில், எண்ணெயை ஊற்றி சீரகம் தாளித்து, இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி பின்னர் நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், கேரட், பட்டாணி, குடைமிளகாய், காலிஃப்ளவர், பனீர், மஞ்சள்தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
வெந்ததும் உப்பு, வேகவைத்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து ஆற வைக்கவும். மாவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்தி போல் திரட்டி பூரணம் வைத்து மூடி, சப்பாத்தி செய்து, சூடான கல்லில் எண்ணெய்/நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். ஊறுகாய், தயிருடன் பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN