பொம்பே ரோஸ்ட்

Loading...

%e0%ae%aa%e0%af%8a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8dபொம்பே ரோஸ்ட்
12 துண்டுகள்

தேவையான பொருட்கள்

பாண் 1 இறாத்தல்
முட்டை 2
பால் 1/2 போத்தல்
வனிலா 1 மே. க
சீனி 3 மே.க
மாஜரின் 1 மே.க
சீனிக்கு பதிலாக உப்புத்தூள் , மிளகுத்தூள் , என்பனவும் சேர்த்துகொள்ளலாம்.

செய்முறை

பானின் நான்கு கரைகளையும் வெட்டி நீக்கி விட்டு பாணின் உட்பகுதியை மட்டும் 12 துண்டுகளாக வெட்டி வைத்து கொள்க .
பாத்திரத்தில் முட்டையை உடைத்து விட்டு சீனியும் சேர்த்து அடித்துக்கொண்ட பின் காய்ச்சி நன்கு ஆறிய பாலை அடித்த முட்டையில் விட்டு வனிலா சேர்த்து அடித்து கொள்க .
பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் , சிறிதளவு மாஜரினை போட்டு உருக விட்டு பரவலாக புரட்டி கொண்ட பின் பாண் துண்டுகளை அடித்து வைத்துள்ள கலவையில் தோய்த்து தோசைகல்லில் போட்டு வாட்டி எடுத்த பின்னர் பரிமாறலாம்

Loading...
Rates : 0
VTST BN