பாண் தக்காளி மசாலா

Loading...

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be
தேவையான பொருட்கள் :

பாண் – 15 துண்டுகள்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – கால் கிலோ
கடுகு – ஒரு தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கொத்தமல்லிதழை – சிறிதளவு
காய்ந்த மிளகாய்– 10
கொத்த மல்லி – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை :

பாண் துண்டுகளை எடுத்து அதை அளவாக சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பை மூட்டி வாணலியை வைத்து சிறு தீயில் பாத்திரம் சூடாகியதும் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு இவற்றை போட்டு சிவக்க வறுத்து எடுத்து ஆறியவுடன் மிக்சியில் போட்டு அரைத்து தூளாக்கி எடுக்கவும்
வாணலியில் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு பொண்ணிறமாக வதக்கி எடுக்கவும். அடுத்து தக்காளி, மஞ்சள் தூள் போட்டு கரண்டியால் நன்கு மசித்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்தவுடன் வறுத்து அரைத்த பொடி போட்டு நன்கு கிளறவும். கடைசியாக இக்கலவையில் பாண் துண்டுகளை போட்டு துண்டுகள் உடையாமல் கவனமாக பிரட்டி விட்டு இறக்கவும்.
அகலமான பாத்திரத்தில் பிரட் மசாலாவை போட்டு அதன் மேல் கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN