பாசிப்பயிறு சப்பாத்தி

Loading...

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பயிறு – முக்கால் கப்,
பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 ,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• பூண்டு, ப.மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
• பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
• வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, பச்சை மிளகாய் விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
• பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
• கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• பின்னர் மாவை மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும்.
• ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பயிறு கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN