பயனாளர்களுக்கு எச்சரிக்கை

Loading...

%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8dஅப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்யும் வசதியினை அப் ஸ்டோரின் ஊடாக வழங்கி வருகின்றது.
இத்தளத்தில் அப்பிள் நிறுவனத்தின் அப்பிளிக்கேஷன்கள் மட்டுமன்றி மூன்றாம் தரப்பின் அப்பிளிக்கேஷன்களும் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு தரவேற்றம் செய்யப்பட்டுள்ள சொப்பிங் தொடர்பான அப்பிளிக்கேஷன்களுள் அனேகமானவை போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அப்பிள் நிறுவனம் நூற்றுக்கணக்கான போலி அப்பிளிக்கேஷன்களை கண்டுபிடித்து நீக்கியுள்ளது.
அமெரிக்காவின் செய்தி நிறுவனங்களான நியூயோர்க் டைம்ஸ் மற்றும் நியூயோர்க் போஸ்ட் என்பவற்றில் போலி அப்பிளிக்கேஷன்கள் தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டே அப்பிள் நிறுவனம் இந்த அதிரடியில் இறங்கியுள்ளது.
இதனால் அப்பிளிக்கேஷன் ஒன்றினை தரவிறக்கம் செய்யும் முன்னர் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய்ந்துவிட்டு தரவிறக்கம் செய்யுமாறு பயனர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

Loading...
Rates : 0
VTST BN