நிலவேம்பு கசாயம் செய்வது எப்படி

Loading...

%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81ஃப்ளு, டெங்கு, சிக்கன் குனியா, பறவைக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. இது போன்ற சமயங்களில் நிலவேம்பு குடிநீர் இந்த காய்ச்சல் பாதிப்பில் இருந்த வேகமாக வெளி வர உதவுகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

நிலவேம்பு- 15 கிராம்
கிக்சிலத் தோல்- 5 கிராம்
கொத்துமல்லி -5 கிராம்

இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும். விஷ காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் சிறந்தது. இந்த நிலவேம்பு பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.

ஒரு நாளில் இரண்டு வேளை உணவிற்கு முன்பு குழந்தைகளுக்கு 30 மிலி அளவும்
பெரியவர்களுக்கு 60 மிலி அளவும் குடிக்கவேண்டும்

காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரையின் படி நாள்தோறும் குடிக்கவேண்டும் காய்ச்சல் அல்லாதவர்கள் மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் குடித்தால் உங்களை காய்ச்சல் அவ்வளவு சீக்கிரத்தில் அண்டாது.

காய்ச்சல் வராமல் தடுக்கும்.
குடல் பூச்சியை நீக்கும்,
பித்த அதிகரிப்பைக் குறைக்கும்,
சர்க்கரை வியாதிக்கு உகந்தது,
அதிர்ச்சியால் உண்டாகும் மயக்கம் தீரும்,
செரிமான கோளாறுகள் நீங்கும்,
குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப் பொருமல் நீங்கும்,
தைராய்டு பாதிப்புகள் குறைய உதவும்,
பெண்களுக்கு உண்டாகும் சூதகக் கட்டி, கர்ப்பக்கட்டி தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்க உதவும்.

Loading...
Rates : 0
VTST BN