நரை முடியை கருப்பாக்குவது எப்படி

Loading...

%e0%ae%a8%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4பொதுவாக நரை முடி என்பது 30 வயதுக்கு மேல் ஆரம்பிக்கும், ஆனால் இன்று நிலமை முற்றிலும் மாறிவிட்டது. சிறு வயதிலேயே பலருக்கும் தலை முடி நரைத்து விடுகின்றது. நாம் உபயோகிக்கும் இரசாயனம் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் போன்றவை இதற்கு முக்கிய காரணம் ஆகும். நரை முடி வந்த பின்பும் தலைமுடியைக் கருமையாக்க சில வழிமுறைகள் இருக்கின்றது.

அதன் படி இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை முறையாகப் பயன்படுத்தினால் நாளடைவில் நரை முடி கருமையாக மாறும். தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவதைத் தடுக்க முடியும்.


அவுரி + மருதாணி :

அவுரி பொடி என்பது நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாகக் கிடைக்கும். இந்தப் பொடி இயற்கையாகக் கருமை நிறத்தைத் தரும். இதனை முடிக்கேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடி அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவ வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்.


தேயிலை மாஸ்க் :

தேயிலையைப் பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொண்டு, அதனைத் தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கருமையாக மாறும்.


பிராமி + கருவேப்பிலை :

ஒரு கொத்து கருவேப்பிலை, 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 2 டீஸ்பூன் பிராமி பொடி ஆகியவற்றைக் கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை உங்கள் வேர்கால்களில் படும்படி நன்கு தலையில் தடவ வேண்டும். 1 மணி நேரம் கழித்து தலைக்கு சிகைக்காய் உபயோகித்துக் குளிக்கவும். வாரம் 2 முறை செய்வது பயனளிக்கும்.


தேங்காய் எண்ணெய் + எலுமிச்சை சாறு :

தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். இது தலையில் இரசாயன விளைவுகளை ஏற்படுத்தி, முடியைக் கருமையாக்கும். வாரம் இருமுறை செய்தால் கூந்தல் கருமை நிறத்தில் கட்டாயம் மாறும்.


நெல்லிக்காய் எண்ணெய் :

இரும்பு வாணிலியில் 1 கப் நெல்லிக்காய் பொடியை வறுக்க வேண்டும். அது சாம்பலாகும் வரை வறுத்து அதில் 500 மி.லி. தேங்காய் எண்ணெய்யை விடவும். அடுப்பைக் குறைந்த தீயிலேயே வைத்திருங்கள். 20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். இந்த எண்ணெய்யை குளிர வைத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருங்கள். பின்னர் அதனை வடிகட்டி அந்த எண்ணெய்யை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் நரை முடி நாளடைவில் கருமையாகும்.

Loading...
Rates : 0
VTST BN