தினை மாவு அடை

Loading...

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88
தேவையானவை:

தினை மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்)
கடுகு-சிறிதளவு
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுந்து – தலா கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து பின் நன்றாக கழுவி அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அடை மாவில் கொட்டிக் கலக்கவும்.
* கடைசியாக அதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு:
இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.

Loading...
Rates : 0
VTST BN