சுருள் முடியினைப் பராமரிக்கச் சில டிப்ஸ்

Loading...

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bfதலைமுடியினை நன்கு பராமரிக்காவிட்டால் வெகு விரைவில் அது நம் உடலில் இருந்து வெளியேறி விடும். ஆம் தலைமுடி உதிர்வு அதிகம் ஏற்படும். பின் வழுக்கைத் தலையுடன் தான் வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருக்கும்.

இதுபோன்ற சங்கடங்களில் சிக்காமல் இருக்கத் தினசரி அடிப்படையில் இல்லாவிட்டாலும் வாரத்திற்கு ஒரு முறையேனும் தலைமுடியினைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இங்கு உங்களது சுருள் முடியினைப் பராமரிக்கச் சில டிப்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சுருள் முடி உள்ளவர்கள் தங்களின் முடிகளை எளிமையாகக் கையாள முடியாது. அவர்களின் முடிகள் அடர்த்தியாகக் காணப்பட்டாலும், முடிகளின் நுனிகளில் பிளவுகள் அதிகமாக ஏற்பட்டு, வேகமாக வறண்டு, அடிக்கடிச் சிக்கல் விழும்.

இதன் காரணமாக எந்த ஹேர் ஸ்டைலும் ஒத்து வராமல் இருக்கும். பார்ட்டிகள் அல்லது விழாவிற்குச் செல்லும் போது சுருள் முடியானது நம் கைகளுக்கு அடங்காமல் இருக்கும்.

சுருள் முடி உள்ளவர்கள் தங்கள் கூந்தலுக்குப் பொருத்தமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியைத் தடுக்க முடியும்.

தினமும் தலைக்குக் குளிப்பதால், முடிகளில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சுருள் முடி உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குளித்தால் போதுமானது.

அடர்த்தியாக இருக்கும் சுருள் முடியானது, தலைக்கு அலங்காரம் செய்யும் போது, கைகளுக்குப் பிடிபடாமல் இருக்கும். இதனால் முடிகளுக்கு அலங்காரம் செய்வதற்கு முன் சிலிக்கான் சீரம் தலையில் தடவினால், கூந்தல் அடங்கி நீளமாகவும் தெரியும்.

Loading...
Rates : 0
VTST BN