சில நிமிடங்களில் முகச் சுருக்கங்களை போக்குவது எப்படி

Loading...

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9aஇன்றைய இயந்திர வாழ்க்கைமுறையில் எல்லாமே மாறிவிட்டது. உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் ஆடை என எல்லாவற்றிலும் கலப்படம் அல்லது இரசாயனம் நிச்சயம் இருக்கின்றது. மேலும் அதிகரிக்கும் வாகனங்களால் ஏற்படும் மாசு நம் சருமத்தை வெகுவாக பாதிப்படையச் செய்து முகத்தில் சுருக்கங்களையும் ஏற்படுத்தி விடுகின்றது.

முகச் சுருக்கங்களை சரி செய்ய பல்வேறு இரசாயனங்கள் கிடைத்தாலும் அவை எதுவும் இயற்கைப் பொருட்களுக்கு அருகிலும் வர முடியாது. இங்கு முகச்சுருக்கங்களைப் போக்க வீட்டிலேயே தயார் செய்யக் கூடிய ஃபேஸ் பேக் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்..

முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இச்சத்துச் சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால், சருமம் ஆரோக்கியமடைந்து, பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும்.



தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு – 1



தயாரிக்கும் முறை:

சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்தக் கலவையை முகம், கழுத்து, கைகளில் தடவி மென்மையாக விரலால் மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3-4 முறை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள முதுமை சுருக்கங்கள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN