சரும பாதிப்பின்றி அழகாகக் காட்சியளிக்க இதைச் செய்யுங்கள்

Loading...

%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%95பொதுவாகவே கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாக மாற அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பார்கள். அழகு என்பது வெளிப்புறத் தோற்றத்தில் இல்லாவிட்டாலும், இன்றைய காலத்தில் அழகாகப் பலரும் பல ஆயிரங்களை மாதா மாதம் செலவழிப்பர்.

வெள்ளையாக இருந்தால் தான் அழகு எனப் பலரும் நினைக்கின்றனர். உண்மையில் அழகு என்பது சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல், சருமத்தை அழகாக மென்மையாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளது.

தினமும் 10 நிமிடம் செலவழித்தாலே சருமமானது அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

முகத்தைப் பால் கொண்டு நன்கு துடைத்து எடுத்த பின்னர், இரவில் முதுமையைத் தடுக்கும் படியான மென்மையான மாய்ஸ்சுரைசரை தடவினால், பாதிப்படைந்த சரும செல்களானது புதுப்பிக்கப்படும்.

இரவில் படுக்கும் முன் கண்களுக்கு மேலேயும், கண் இமைகளிலும் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி மசாஜ் செய்து, தூங்கினால், காலையில் எழும் போது கண்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

இரவில் உதடுகளுக்கு ஈரப்பசையூட்ட மறக்காதீர்கள். நல்ல தரமான லிப் பாம்களை இரவில் படுக்கும் முன் உதடுகளுக்குத் தடவுங்கள். இதனால் உதடுகள் மென்மையாகவும், வறட்சியடையாமலும் அழகாக இருக்கும்.

இங்கு வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகளைத் தினமும் பின்பற்றினாலே சருமம் ஆரோக்கியத்துடன் காணப்படும், மேலும் எவ்வித சரும பாதிப்பும் வராது.

Loading...
Rates : 0
VTST BN