சத்தான சோள அடை

Loading...

%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b3-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88
தேவையான பொருட்கள் :

சோளம் – அரை டம்ளர்
கடலைப்பருப்பு – கால் டம்ளர்
துவரம்பருப்பு – கால் டம்ளர்
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறு துண்டு
மிளகாய் வற்றல் – 5
பெரிய வெங்காயம் – ஒன்று
சீரகம் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு – சிறிது
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப


செய்முறை :

* வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
* சோளம் மற்றும் பருப்பு வகைகளை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
* பின்னர் ஊற வைத்த பருப்பு கலவையை தண்ணீர் வடித்து மிக்ஸியில் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
* அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும். மேலே எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சுவையான சோள அடை ரெடி.

Loading...
Rates : 0
VTST BN