குளிர் காலத்தில் அதிகமாகும் முடி உடைத்தல் பிரச்சனைக்கு தீர்வு என்ன

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95காலநிலை மாற்றம் மட்டும் குளிர்சியினால் உடல்நலம் மட்டுமின்றி தலை முடியும் கூட பாதிப்படையும். உங்களுக்கு தெரியுமா, மற்ற கால நிலைகளை விட குளிர் காலத்தின் போது தான் தலைமுடி அதிகம் பாதிக்கப்படுகிறது. குளிர் காலத்தில் தான் அதிகமாக முடி வறட்சி, உடைத்தல், கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. உங்கள் முடியில் வலிமை மிகவும் குறைவாக இருந்தால் இது அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். இனி அவற்றைப் பற்றி காணலாம்….

கூந்தல் பாதிப்படைந்துள்ளதென்றால், கூந்தல் முதலில் அதன் மென்மைத் தன்மையை இழந்து காணப்படும். மேலும் திடீரென பட்டுப்போன்று அழகாகக் காணப்படவில்லையெனில், அது ஆரோக்கியமற்று உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக கூந்தலின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு காணப்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்புகள் கூந்தலின் முனைகளில் இரண்டாக பிளவுபட்டு, கூந்தலின் அழகையே கெடுத்து, முரட்டுத்தனமான தோற்றத்தில் காணப்படும்.

பிளவுகள் ஏற்பட்டாலே, சாதாரணமாக வளரும் கூந்தலின் வளர்ச்சியில் தடை ஏற்படும். இதனால் கூந்தலின் மயிர்கால்களில் போதிய சத்துக்கள் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். எப்போது கூந்தலின் இயற்கை நிறமான கருப்பு நிறம் மாறி, செம்பட்டை நிறத்தில் மாறுகிறதோ, அதை வைத்தும் கூந்தலின் ஆரோக்கியமற்ற நிலையை தெரிந்து கொள்ளலாம்.

முடியை சீவும் போது அதிகமான அளவில் கூந்தல் சீப்புடன் வந்தால், கூந்தல் முற்றிலும் வலுவை இழந்து மோசமான நிலையில் உள்ளது என்பதை அறியலாம். ஆரோக்கியமற்ற கூந்தலுக்கும், கூந்தல் வறட்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆனால் கூந்தல் வறட்சி அதிக அளவில் இருப்பின் அது கூந்தல் அதிகம் பாதிப்படைந்துள்ளது என்பதற்கு அறிகுறி. ஆகவே அடிக்கடி எண்ணெய் குளியலை மேற்கொள்வது நல்லது.

சிலருக்கு கூந்தலின் முனைகள் மட்டும் அடர்த்தி குறைவாக காணப்படும். இவ்வாறு இருந்தாலும் எளிதில் கூந்தலின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளலாம். இளம் வயதிலேயே வெள்ளை முடியானது வந்துவிடுகிறது. சிலருக்கு அது பரம்பரையின் காரணமாக இருக்கலாம். ஆனால் அது இல்லாமல், வெள்ளை முடி 25 வயதிலேயே வந்துவிட்டால், கூந்தலில் ஏதோ பிரச்சனை என்பதை அறியலாம்.

Loading...
Rates : 0
VTST BN