குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae• குளிர்காலத்தில் தவறாமல் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும். அதற்காக மிகுந்த எண்ணெய் பசை கொண்ட மாய்சுரைசரைப் பயன்படுத்தாமல், ஜெல் அல்லது க்ரீம் வகை மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவது சிறந்தது.

• குளிர்காலத்தில் தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் சரும செல்களுக்கு ஊட்டம் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட செல்களும் புத்துயிர் பெறும்.

• குளிர்காலத்தில் பலரும் நல்ல சூடான நீரில் குளிக்கத் தான் விரும்புவோம். ஆனால் சுடுநீர் சரும வறட்சியை அதிகரிக்கும். எனவே வெதுவெதுப்பான நீரையே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.

• குளிர்காலத்தில் தவறாமல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும். அதிலும் ஓட்ஸ், காபி பவுடர் போன்றவற்றைக் கொண்டு ஸ்கரப் செய்வது மிகவும் நல்லது.

• கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான நட்ஸ், மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை வயிற்று உப்புசத்தையும், முகப்பருக்களையும் உண்டாக்கும்.

Loading...
Rates : 0
VTST BN