உள்நாட்டில் நீர் வழித்தடத்தில் கார்களை எடுத்துச் செல்லும் மாருதி நிறுவனம்

Loading...

%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9fபூம்புகார் – காவேரி பூம்பட்டினம், பண்டைய சோழர்களின் தலைநகரமாக இருந்தது. அங்குதான் வாணிபம், கலாசாரம் என எல்லாம் இருந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அடித்த ஆழிப்பேரலையில் சிக்கி அந்நகரம் கடலுக்குள் போனது. அதுபோலவே, ராமேஸ்வரத்திலுள்ள தனுஷ்கோடியும் மிகப் பெரிய வர்த்தக நகரமாக இருந்தது. கடலின் கோரத் தாண்டவத்தால் அந்தப் பகுதியும் காணாமல் போனது. இதை எதற்காகக் கூறுகிறோம் என்றால், பழங்காலத் தமிழர்களின் முக்கிய வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து ஆகியவை நீர் வழித் தடங்களை ஓட்டியே அமைந்திருந்தன. அதற்குக் காரணம் வர்த்தகப் போக்குவரத்தை கடல் மற்றும் நதிகளின் வழியே மேற்கொள்வது சுலபம் என்பதால்தான். அதன் பிறகு சாலை வழி மற்றும் ரயில் வழி சரக்குப் போக்குவரத்துதான் இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே சிறிய அளவில் மட்டும் நீர் வழிப் போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், மாருதி நிறுவனம், தங்களது கார்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்வதற்கு உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளது மாருதி நிறுவனம். மத்திய கப்பல் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சாலை வழியே சரக்குகளைக் கொண்டு செல்ல கிலோ மீட்டருக்கு சராசரியாக ரூ.1.50 செலவாகிறது. ரயில்வழிப் போக்குவரத்தில் கிலோ மீட்டருக்கு ரூ.1 செலவாகும். இந்த இரண்டை ஒப்பிடும் போது நீர்வழிப் போக்குவரத்தில் இருக்கும் செலவினங்கள் மிகக் குறைவாகும். ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 50 பைசா மட்டுமே நீர் வழித் தடங்களில் சரக்குப் போக்குவரத்து மேற்கொண்டால் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வாராணசியிலிருந்து கொல்கத்தா வரை கங்கை நதியில் மாருதி கார்ளைக் கொண்டு செல்வதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்துக்குச் சொந்தமான கப்பலில் மாருதி கார்கள் கொண்டு செல்லப்படவுள்ளன. இந்தியாவில் மொத்தம் 14,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீர் வழித் தடங்கள் உள்ளன. ஆனால் அதில் குறைந்த தொலைவே போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. நாட்டிலுள்ள 111 ஆறுகளை நீர்வழித் தடங்களாக மாற்றுவதற்கான மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய முயற்சிகள் எப்போதுமே வளர்ச்சியின் தொடக்கமாகவே இருக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

Loading...
Rates : 0
VTST BN