உருளைக்கிழங்கு கார போளி

Loading...

%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – அரை கிலோ
கடலை பருப்பு – 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 ஒரு மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு – 10
மைதா மாவு – 2 கப்
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
நெய் – தேவைக்கு



செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு நன்றாக வறுத்த பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கிளறி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாக போளி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடோற்றவும். ஒரு உருண்டை எடுத்து வாழை இலையில் மெலிதாக தட்டி நடுவில் பூரணம் வைத்து மூடி மறுபடியும் மெல்லியதாக தட்டி, தவாவில் போட்டு சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு போளியை சுட்டு எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு போளி ரெடி.

Loading...
Rates : 0
VTST BN