உதடு பார்ப்பதற்கு கருப்பாக உள்ளதா இதோ வழிகள்

Loading...

%e0%ae%89%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aaஒருவரின் அழகை அதிகமாக வெளிக்காட்டுவதில் அவர்களின் உதட்டுக்கு முக்கிய பங்குள்ளது.

ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையோகவே சிகப்பு நிற உதடு இருப்பவர்களை பார்ப்பது அரிது

ஏனெனில் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும்.

இதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் தான் காரணமாக உள்ளது.

இதனால் தான் பெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள்.

எனவே உதடுகளின் சிவப்பு நிறத்தின் அழகை இயற்கையாகவே அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.


கருப்பான உதட்டின் நிறத்தை சிவப்பாக மாற்றுவது எப்படி?

தினமும் இரவில் படுப்பதற்கும் முன்பு எலுமிச்சை சாற்றில், சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் சூடான நீரில் கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி, உதடுகளுக்கு அழகான சிவப்பு நிறம் கிடைக்கும்.
பீட்ரூட்டை துண்டாக நறுக்கி அதை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியானதும், அந்த பீட்ரூட் துண்டுகளை எடுத்து உதடுகள் மீது 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்தால், உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும்.

Loading...
Rates : 0
VTST BN