ஆண்கள் வெள்ளையாக இதைச் செய்தாலே போதும்

Loading...

%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9aஅழகை பாதுகாப்பதில் ஆண்களை விடப் பெண்கள் தான் அதிகம் முக்கியத்துவம் அளிப்பார்கள். அதிக அக்கறை கொண்டு அழகினை பாதுகாத்துக் கொள்ளவே பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள்.

ஆண்கள் அதிகம் சிரமம் இல்லாமல் கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கிப் பயன்படுத்தி விரைவில் நல்ல பலன் கிடைக்க வேண்டும் என நினைப்பர். அதிகளவு வெளியில் சுற்றுவதால் ஆண்களின் சருமம் இயற்கையாகவே கருமையாக இருக்கும்.

இங்கு அதிகம் செலவில்லாமல், வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வெள்ளையாக ஆண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..



எலுமிச்சை:

எலுமிச்சை சாற்றினைச் சம அளவு நீரில் கலந்து, சருமத்தின் மீது தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவலாம். இல்லையேல், எலுமிச்சை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.



கற்றாழை:

கற்றாழை ஜெல்லை தினமும் காலை மற்றும், மாலை வேலையில் முகத்திற்குத் தடவி ஊற வைத்துக் கழுவி வந்தால், சருமத்தின் கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.



கடலை மாவு:

கடலை மாவுடன் பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துச் சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்கும். இந்த முறையை ஆண்கள் தினமும் பின்பற்றி வந்தால், கருமை நீங்குவதோடு, முகம் பொலிவு பெறும்.



சந்தனம்:

சந்தனப் பொடி குளிர்ச்சிமிக்கது மற்றும் இது சரும கருமையைப் போக்கவல்லதும் கூட. சந்தனப் பொடியுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உலர வைத்து கழுவ வேண்டும்.



வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயைக் கொண்டு தினமும் முகத்தைச் சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கும்.



முல்தானி மெட்டி:

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின் கழுவ வேண்டும்.

Loading...
Rates : 0
VTST BN