ஹோண்டா சிபிஆர் 250 ஆர்ஆர் ஸ்போர்ட் பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம்

Loading...

%e0%ae%b9%e0%af%8b%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-250-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8dஜப்பானின் ஹோண்டா நிறுவனம், அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு மாடல்களில் டூ விலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில், ஸ்கூட்டர் மாடலை எடுத்துக் கொண்டால் ஆக்டிவா செம ஹிட்டானது. அதேபோல், பைக்குகளில் ஷைன் மற்றும் யுனிகார்ன் மாடல்களும் மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றது.
மொத்தத்தில் ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் கலக்கும் அல்ட்ரா மாடல் வண்டிகளாக வலம் வருகின்றன ஹோண்டா தயாரிப்புகள்.

இந்த நிலையில் சூப்பரான வடிவமைப்பு மற்றும் ஸ்டைலுடன் கூடிய ஸ்போர்ட் பைக் ஒன்றை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டது. சிபிஆர் 259 ஆர்ஆர் எனப் பெயரிடப்பட்ட அந்த ஸ்போர்ட் பைக் பற்றிதான் பெரும்பாலான இளைஞர் கூட்டம் மத்தியில் சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த மாடல் பைக் எப்போது மார்க்கெட்டுக்கு வரும் என்ற ஆவல் அனைவருக்கும் மேலோங்கியுள்ளது. இந்நிலையில், ஹோண்டா சிபிஆர் 250 ஆர் ஆர் மாடல் பைக், இந்தோனேசியாவில் வரும் 25-ஆம் தேதி அறிமுகமாகப் போவதாக வெளியான செய்திகள் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ஒரு சில இந்தோனேசிய ஊடக நிறுவனங்களுக்கு சிபிஆர் 250 ஆர் ஆர் மாடல் அறிமுகத்துக்கான அழைப்பிதழை ஹோண்டா நிறுவனம் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
250 சிசி ஸ்போர்ட் பைக்கான அந்த மாடலில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை ஹோண்டா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அதேவேளையில் சிபிஆர் 250 ஆர் ஆர் பைக்கில் டுவின் சிலிண்டர் எஞ்சினும், 6 கியர்களும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், எல்இடி விளக்குகள், அதிக திறன் கொண்ட முகப்பு விளக்குகள் (புரொஜக்டர் ஹெட்லைட்), தலைகீழ் அமைப்புடைய இன்வெர்டட் ஃபோர்க்ஸ் ஆகிய அம்சங்களும் அந்த மாடலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சிபிஆர் 250 ஆர் ஆர் மாடல் களமிறக்கப்பட்டால், கவாஸகி நிஞ்சா 300 மற்றும் யமஹா ஆர் 3 ஆகிய பைக்குகளுக்கு அது சவாலாக விளங்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற மோட்டார் ஷோவில் சிபிஆர் 250 ஆர் ஆர் அறிமுகப்படுத்தப்பட்ட போதே அதற்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் இருந்தது.
அதெல்லாம் சரி… இந்தோனேசியாவில் வரும் 25-ஆம் தேதி அறிமுகமாகிறதோ, இல்லையோ… இந்தியாவில் எப்போது இந்த மாடல் அறிமுகமாகும்? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆனால், அது தொடர்பான யூகங்கள் கூட எதுவும் வெளியாகாமல் இருக்கிறது. இது இங்குள்ள ஸ்போர்ட் பைக் ஆர்வலர்களின் ஏக்கத்தை அதிகரித்துள்ளது என்று கூட சொல்லலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply