ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் விலை உயர்வு – முழு விவரம்

Loading...

%e0%ae%b9%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87ஹூண்டாய் இந்தியா நிறுவனம், தங்களின் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் விலைகளை செப்டம்பர் மாதத்தில் இருந்து உயர்த்தப்பட உள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் விலை உயர்வு குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
ஹூண்டாய் க்ரெட்டா…

ஹூண்டாய் க்ரெட்டா, தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் காம்பேக்ட் எஸ்யூவி ஆகும். இது கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
விலை உயர்வு;

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தங்களின் புகழ்பெற்ற மாடல்களின் விலைகளை உயர்த்தி வருகிறது. இவ்வாறாக, ஹூண்டாய் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகளின் செப்டம்பர் முதல் உயர்த்தப்படுகிறது.
விலை உயர்வின் அளவு;

இதில், ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் அனைத்து வேரியன்ட்களின் விலைகளும், சுமார் 15,000 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட உள்ளது.
விலை ஏற்றத்திற்கான காரணம்;

மூல பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரப்பதாக கூறி, ஹூண்டாய் இந்தியா நிறுவனம், க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி உள்ளிட்ட தயாரிப்புகளின் விலை உயர்த்தப்படுவதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவிக்கிறது.
முறையான அறிவிப்பு;

இந்த விலை உயர்வு குறித்த முறையான அறிவிப்புகள், அனைத்து டீலர்ஷிப்களுக்கும் முறைப்படி இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமோக வரவேற்பு;

க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவிக்கு இந்திய வாகன சந்தைகளில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டது முதல், ஹூண்டாய் நிறுவனம், சுமார் 78,000 இதில், ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
சமீபத்திய அறிமுகம்;

ஹூண்டாய் நிறுவனம், சமீபத்தில் தான் இந்திய வாகன சந்தைகளில் ஹூண்டாய் க்ரெட்டா ஆன்னிவர்சரி எடிஷனை அறிமுகம் செய்தது.
விலை;

பிரிமியம் மாடலாக விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் பேஸ் வேரியன்ட் எனப்படும் அடிப்படை வேரியன்ட், 9.17 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து அம்சங்களும் நிறைந்த, ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் டாப் என்ட் வேரியன்ட், 14.51 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்ஜின் தேர்வுகள்;

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, மொத்தம் 3 இஞ்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, 1.6 லிட்டர் விடிவிடி பெட்ரோல், 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் சிஆர்டிஐ டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கும்.
கியர்பாக்ஸ்;

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் 3 இஞ்ஜின்களுமே 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின்கள் மட்டும் தேர்வு முறையிலான 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply