ஹூண்டாயின் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டாவின் விலை விவரங்கள் கசிந்தது

Loading...

%e0%ae%b9%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா (1st Anniversary Edition Creta) காரின் விலை விவரங்கள் கசிந்துள்ளது. க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியானது, ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மாடல் ஆகும். இது, இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யபட்டது. இது இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டு ஒரு ஆண்டு நிறைவடைவதை ஒட்டி, இதனை கொண்டாடும் விதமாக முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா, அறிமுகம் செய்யபட்டுள்ளது. தற்போது, இதன் விலை விவரம் வெளியாகியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகம்;
ஹூண்டாயின் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா, வரும் நாட்களில் அல்லது வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக செய்தியகள் வெளியாகிறது. இது, முதன் முதலாக, பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாய்னா நேஹ்வாலுக்கு பரிசு;
ஹூண்டாயின் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா, பெங்களூருவில் தான் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டாவின் முதல் காரை, ஹூண்டாய் நிறுவனம் பேட்மின்டன் விராங்கனை சாய்னா நேஹ்வாலுக்கு பரிசாக வழங்கினர். இது, சாய்னா நேஹ்வால் 2016 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பெற்ற வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் ஒய்.கே. கூ மற்றும் சாய்னா நேஹ்வால் ஆகியோர் பங்கேற்றனர்.
விலைகள் கசிந்தது;
ஆட்டோகார் இந்தியா நிறுவனம், சூரத் பகுதியில் உள்ள டீலர்கள், முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டாவின் விலை விவரங்களை கசிய விட்டதாக தகவல்கள் வெளியாகிறது. அந்த டீலர்கள் கருத்து படி, முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டாவின் பெட்ரோல் வேரியன்ட், 12,50,717 லட்சம் ரூபாய் என்ற விலையிலும், டீசல் வேரியன்ட் 14,06,961 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகள், எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
கிடைக்கும் வேரியன்ட்;
முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா, இந்த எஸ்யூவியின் எஸ்எக்ஸ்+ வேரியன்ட்டை அடிப்படையாக கொணடுள்ளது.
டிசைன்;
ஹூண்டாய் வழங்கும் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா, தற்போது சாலைகளில் இயங்கும் மாடல்களை காட்டிலும் முற்றிலுமாக வேறுபடுத்தி காட்டும் வகையிலான சில பிரத்யேக டிசைன் அம்சங்கள் கொண்டுள்ளது. கார்களின் பக்கவாட்டில் டோர்களின் மீதுள்ள பிளாக் கிளாட்டிங்-களுக்கு மேலே ரெட் மற்றும் பிளாக் நிறத்திலான ஸ்ட்ரைப்கள் சேர்க்கபட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் சி-பிள்ளர் மேலே ‘1st Anniversary Edition’ (ஃபர்ஸ்ட் ஆன்னிவர்சரி எடிஷன்) என்று வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்ட்ரைப்கள், ஹூண்டாய் பேட்ஜ்-ஜின் வலது பக்கத்திலும் உள்ளது. இது க்ரெட்டாவின் வலது பக்கத்தில் உள்ள டெயில்லேம்ப் வரை நீண்டுள்ளது.
இன்டீரியர்;
ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவியின் இன்டீரியரிலும், இதே போன்ற டியூவல் டோன் வேலைப்பாடுகள் உள்ளது. காரின் வெளியே ரெட் மற்றும் கிரே நிறத்தில் டியூவல் டோன் வேலைப்பாடுகள் உள்ளன. மேலும், இந்த க்ரெட்டா எஸ்யூவியின் இன்டீரியரில் ரெட் மற்றும் பிளாக் நிறத்தில், டியூவல் டோன் வேலைப்பாடு உள்ளன.
இஞ்ஜின் திறன்;
ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, பெட்ரோல் இஞ்ஜின் 121 பிஹெச்பியையும், 151 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும். இதன் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின், 89 பிஹெச்பியையும், 126 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.
கியர்பாக்ஸ்;
ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் தேர்வு முறையிலான 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.
பாதுகாப்பு அம்சங்கள்;
முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டாவில் இபிடி., தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட்டிருக்கிறது. மிட் வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்ஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.
வண்ணங்கள்;
ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, ஸ்லீக் சில்வர், போலார் வைட் மற்றும் பேஷன் ரெட் ஆகிய நிறங்களில் வழங்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply