ஹூண்டாயின் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Loading...

%e0%ae%b9%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9aஹூண்டாயின் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி (1st Anniversary Edition) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் ஏராளமான மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, இங்கு விற்பனையும், ஏற்றுமதியையும் செய்து வருகிறது. மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு வித விதமான தயாரிப்புகளை மிதமான விலைகளை அறிமுகம் செய்வதால் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல மவுசு உள்ளது. இந்த வகையில் தான், க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியும் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது. இதன் தொடர்ச்சியாக, முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியும் அறிமுகம் செய்யபட்டது. முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா…
ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் க்ரெட்டா, கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஓர் ஆண்டு பூர்த்தி அடைவதை ஒட்டி, இதனை கொண்டாடும் விதமாக, ஹூண்டாய் நிறுவனம், முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவியை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டில், இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது முதல், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி தான், மிகவும் அதிகமான பரிசுகள் பெற்ற மாடலாக விளங்கி வருகிறது.
முதல் காரை பரிசாக பெற்ற சாய்னா;
ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்த முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டாவின் முதல் கார், பேட்மின்டன் விராங்கனை சாய்னா நேஹ்வாலுக்கு பரிசாக வழங்கபட்டுள்ளது. சாய்னா நேஹ்வால் 2016 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பெற்ற வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டாவின் முதல் கார், பரிசாக வழங்ககப்பட்டது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சாய்னா நேஹ்வால் மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் ஒய்.கே. கூ ஆகியோர் பங்கேற்றனர்.
டிசைன்;
ஹூண்டாயின் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா, பல்வேறு பிரத்யேக டிசைன் அம்சங்கள் கொண்டுள்ளது. இதன் டிசைன் அம்சங்கள் தற்போது சாலைகளில் இயங்கும் வழக்கமான மாடல்களை காட்டிலும் முற்றிலுமாக வேறுபட்டுள்ளது. இதன் கார்களின் பக்கவாட்டில் டோர்களின் மீதுள்ள பிளாக் கிளாட்டிங்-களுக்கு மேலே ரெட் மற்றும் பிளாக் நிறத்திலான ஸ்ட்ரைப்கள் உள்ளது. இந்த எஸ்யூவியின் சி-பிள்ளர் மேளாக ‘1st Anniversary Edition’ (ஃபர்ஸ்ட் ஆனிவர்சரி எடிஷன்) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஸ்ட்ரைப்கள், ஹூண்டாய் பேட்ஜ்-ஜின் வலது பக்கத்திலும் உள்ளன. இவை க்ரெட்டாவின் வலது பக்கத்தில் உள்ள டெயில்லேம்ப் வரை நீண்டுள்ளது.
இன்டீரியர்;
ஹூண்டாய் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவியின் இன்டீரியர் பகுதியிலும், இதே போன்ற டியூவல் டோன் வேலைப்பாடு செய்யபட்டுள்ளது. ஆனால், காரின் வெளியே ரெட் மற்றும் கிரே நிறத்தில் டியூவல் டோன் வேலைப்பாடுகள் உள்ளன. இந்த க்ரெட்டா எஸ்யூவியின் இன்டீரியரில் ரெட் மற்றும் பிளாக் நிறத்திலான டியூவல் டோன் வேலைப்பாடுகள் உள்ளன. இதன் ஏசி வெண்ட்டின் சரவுன்ட் ட்ரிம் கூட நிறத்தில் பெயின்ட் செய்யபட்டுள்ளது.
இஞ்ஜின்;
ஹூண்டாய் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, ஸ்பெஷல் எடிஷனாக வெளியிடப்பட்டுள்ளதால், இதில் எந்த விதமான பெரிய மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஹூண்டாய் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, வழக்கமான க்ரெட்டா போன்றே, 1.6 லிட்டர் டியூவல் விடிவிடி பெட்ரோல் இஞ்ஜின், 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் மற்றும் 1.6 லிட்டர் யூ2 சிஆர்டிஐ விஜிடி டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகிறது.
இஞ்ஜின் திறன்;
ஹூண்டாய் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, 1.6 லிட்டர் டியூவல் விடிவிடி பெட்ரோல் இஞ்ஜின், 122 பிஹெச்பியையும், 151 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும். இதன் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின், 89 பிஹெச்பியை வெளிப்படுத்தும். இதன் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின், 126 பிஹெச்பியையும், 256 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.
கியர்பாக்ஸ்;
ஹூண்டாய் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவியின் இஞ்ஜின்கள், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வெளியாகிறது.
பாதுகாப்பு அம்சங்கள்;
அனைத்து வேரியண்ட்டுகளிலும் இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. மிட் வேரியன்ட்களில் டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்ஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.
வண்ணங்கள்;
ஹூண்டாய் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, போலார் வைட், ஸ்லீக் சில்வர் மற்றும் பேஷன் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
விலை;
ஹூண்டாய் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா – பெட்ரோல் வேரியன்ட் – 12.24 லட்சம் ரூபாய் ஹூண்டாய் முதல் ஆனிவர்சரி எடிஷன் க்ரெட்டா – டீசல் வேரியன்ட் – 13.76 லட்சம் ரூபாய்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply