ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான வயர் லெஸ் சார்ஜர் ஒன்றினை வீட்டில் உருவாக்குவது எப்படி

Loading...

%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95தற்போதெல்லாம் இலத்திரனியல் சாதனங்களின் அளவு மிகவும் சிறிதாகிக்கொண்டே வருகின்றது.

அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் என்பனவும், அவற்றிற்கான துணைச்சாதனங்களும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும், இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு வயர்லெஸ் தொழில்நுட்பமானது மிகவும் கைகொடுக்கின்றது.

இதற்கு உதாரணமாக Wi-Fi எனும் வயர்லெஸ் இணையத் தொழில்நுட்பத்தினை குறிப்பிடலாம்.

இதே போலவே வயர்லெஸ் முறையில் மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜர்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இப்படியிருக்கையில் சாதாரண சார்ஜர் ஒன்றினை பயன்படுத்தி வயர்லெஸ் சார்ஜரினை உருவாக்குவது தொடர்பில் இங்கே காணலாம்.

இதற்கு மொபைல் சாதன சார்ஜர் ஒன்றும், வைண்டிங் கம்பிச் சுருளும் போதுமானது.

மொபைல் சார்ஜரினை வீடியோவில் காட்டியவாறு இரண்டு பாகங்களாக வெட்டி இரண்டு முனைகளிலும் வைண்டிங் கம்பியைப் பயன்படுத்தி மின்காந்தம் ஒன்றினை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அமைக்கப்படும் மின் காந்தத்தின் ஊடாக காந்தப் புலம் கடத்தப்பட்டு மீண்டும் மின் சக்தியாக மாற்றப்படுகின்றது.

இதில் மின் சக்தியின் அளவு, வைண்டிங் கம்பியின் சுற்றுக்களின் எண்ணிக்கை என்பவற்றினை அதிகரிக்கும்போது காந்தப் புலம் அதிகரிக்கப்பட்டு குறித்த சார்ஜரை பயன்படுத்தக்கூடிய தூர எல்லையை அதிகரிக்க செய்ய முடியம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply