ஸ்பெரோ இ-பைக் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்

Loading...

%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%87-%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bfஸ்பெரோ இ-பைக் எனப்படும் எலக்ட்ரிக் சைக்கிளை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. ஸ்பெரோ என்ற எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் நிறுவனம் தான் இந்த ஸ்பெரோ இ-பைக்கை தயாரித்து வழங்குகிறது. ஸ்பெரோ இ-பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வேரியன்ட்கள்;
ஸ்பெரோ இ-பைக், இ30, இ60 மற்றும் இ100 என மொத்தம் 3 வெவ்வேறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இ30 மற்றும் இ100 வேரியன்ட்கள் பிரத்யேகமாக ஆண்களுக்காக அறிமுகம் செய்யபட்டுள்ளது. இ60 வேரியன்ட்டை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவர்களும் உபயோகிக்கலாம்.
கிரவுட் ஃபண்டிங்;
ஸ்பெரோ என்ற இந்த எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் நிறுவனம், கிரவுட் ஃபண்டிங் எனப்படும் வெகுஜன நிதி திரட்டும் முறையில், இந்த ஸ்பெரோ இ-பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பெரோ இ-பைக் தான் கிரவுட் ஃபண்டிங் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் இ-பைக் ஆகும். இவ்வாறு முன்னதாகவும் ஒரு முறை, கிரவுட் ஃபண்டிங் என்ற பின்பற்றி இந்த இ-பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அப்போது கிடைத்த நல்ல வரவேற்ப்பை தொடர்ந்து, இந்த கிரவுட் ஃபண்டிங் முறையை 2-வது முறையாக பின்பற்றி இந்த இ-பைக்கை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ரேஞ்ச்;
ஸ்பெரோ இ-பைக்கின் இ30 வேரியன்ட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால், 30 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். ஸ்பெரோ இ-பைக்கின் இ60 வேரியன்ட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். ஸ்பெரோ இ-பைக்கின் இ100 வேரியன்ட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோமீட்டர் வரை பயணிக்க வாய்ப்புகள் உள்ளது.
பேட்டரி;
ஸ்பெரோ இ-பைக்கின் இ30, இ60 மற்றும் இ100 ஆகிய 3 வேரியன்ட்களிலும் கியர் உடைய 250W பிரெஷ்லெஸ் எலக்ட்ரிக் மோட்டாருக்கு சக்தி அளிக்க கூடிய வகையிலான 48V லித்தியம்-இயான் பேட்டரி பொருத்தபட்டுள்ளது.
சார்ஜிங்;
2 மணி நேரம் சார்ஜிங் செய்வதன் மூலம், ஸ்பெரோ இ-பைக்கின் இ-பைக்குகள் 80% என்ற அளவிற்கு சார்ஜிங் ஆகிவிடுகிறது. எனினும், இந்த பைக்கிகளை 100% சார்ஜிங் செய்யவேண்டும் என்றால் மேலும் 2 மணி நேரம் ஆகும்.
மாற்று சார்ஜிங் முறை;
ஸ்பெரோ இ-பைக்கை ரீஜெனெரேஷன் எனப்படும் மாற்று முறையிலும் சார்ஜ் செய்யலாம். நீங்கள் இந்த ஸ்பெரோ இ-பைக்கை ஜோராக பெடல் செய்யும் போதும், முன் பக்கத்தில் உள்ள சிங்கிள் பிரேக்கை (டிஸ்க் பிரேக்கை) உபயோகிஈகும் போதும் சார்ஜ் உருவாகி தேக்கிவைத்து கொள்ளப்படுகிறது.
வேகம்;
ஸ்பெரோ இ-பைக்கில், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 25 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை வெறும் 10 நொடிகளில் எட்டிவிடலாம்.
எடை;
ஸ்பெரோ இ-பைக், வெறும் 24 கிலோகிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இது 100 கிலோகிராம் வரையிலான எடையை சுமக்கும் திறன் உடையதாகும்.
பின்குறிப்பு;
ஸ்பெரோ இ-பைக்கை இயக்கும் போது ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சாலைகளில் உள்ள குழிகளில் கவனமாக இருக்கவும். ஏனெனில், இந்த ஸ்பெரோ இ-பைக்கில் ரியர் சஸ்பென்ஷன் வசதி இல்லை என்பதில் நினைவில் கொள்ள வேண்டும்.
புக்கிங்;
ஸ்பெரோ இ-பைக்குகளை, பெங்களூருவை மையமாக கொண்டு இயக்கும் கிரவுட் ஃபண்டிங் இணையதளமான www.fuelyourdream.com மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
விலை;
ஸ்பெரோ இ-பைக்கின் அடிப்படை வேரியன்ட் 29,999 ரூபாய் என்ற விலையிலும், டாப் என்ட் வேரியன்ட் 47,999 ரூபாய் என்ற விலையிலும் விற்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply