ஸ்காட் நிறுவனத்தின் ரியோ ஒலிம்பிக் எடிசன் சைக்கிள்கள் அறிமுகம்

Loading...

%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%8bதி பைசைக்கிள் தீஃப் என்ற படத்தை அனைவரும் கேள்விப்பட்டிருக்கக் கூடும். 1948-ஆம் வெளியான இத்தாலி திரைப்படம்… இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், தனது தொலைந்து போன சைக்கிளைத் தேடும் ஏழைத் தந்தையின் கதை. இன்றளவும் உலக அளவில் பேசப்படும் படம் அது. சைக்கிள் என்பது ஏதோ உயிரற்ற பொருள் என்று இல்லாமல், அதனுடன் கதையின் நாயகன் வைத்திருந்த அன்பு உணர்வு ரீதியாக அந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்… அதுபோலத்தான் நமக்கும்… பால்ய காலங்களில் மறக்க முடியாத பல தருணங்கள் சைக்கிளுடன்தான் இருந்திருக்கின்றன. நமது நினைவோடைக்குள் அசை போடும்போது அதில் நிச்சயம் ஒரு சைக்கிளும் பிராயாணிக்கும். அந்த அளவுக்கு சைக்கிள்கள் நம் வாழ்வின் ஓர் அங்கம்.. சரி விஷயத்துக்கு வருவோம், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்காட் ஸ்போர்ட் என்ற பிரபல சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் பலருக்கு பரிச்சயமான ஒன்று. அந்த நிறுவனம் பல மாடல்களில் ஸ்போர்ட் சைக்கிள்களைத் தயாரித்து மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்காட் சைக்கிள்களை ஓட்டுதே கௌரவத்துக்குரிய செயலாக சில நாடுகளில் பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெறும் சைக்கிள் பந்தயங்களில் கூட முன்னணி வீரர்கள் ஸ்கார் சைக்கிள்களுடன் பங்கேற்பதைக் காண முடியும். அந்த அளவுக்கு ஃபேமஸ் இந்த மாடல் சைக்கிள்கள். இந்த நிலையில், ஸ்காட் நிறுவனம் ரியோ ஒலிம்பிக் வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக புதிய மாடல் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. லிமிடெட் எடிசனாக வந்துள்ள இந்த ரியோ சைக்கிள்களின் வண்ணங்கள், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற பிரேசில் நாட்டின் கலாசாரம் மற்றும் பன்முகத் தன்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 50 சைக்கிள்களை ஏலம் மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாம் ஸ்காட் நிறுவனம். அதில் கிடைக்கும் தொகையை, விளையாட்டுப் போட்டிகளுக்கு குழந்தைகளைத் தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க ஸ்காட் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் விரைவில் இந்த சைக்கிள்கள் அறிமுகமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களைப் போற்றும் விதமாகவும், விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த மாடல் சைக்கிள்கள் மார்க்கெட்டுக்கு வரவுள்ளன. விலை ஒரு புறம் இருந்தாலும், உயரிய நோக்கத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சைக்கிள்களை ஓட்டும்போது நிச்சயம் நமக்குள் ஒரு ஆத்ம திருப்தி ஏற்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply