வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு

Loading...

%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8dமுகநூல் பக்கமானது தனது பயன்பாட்டாளர்களுக்கு ஏனைய வசதிகளை அளித்துவந்த நிலையில் தற்போது முகநூல் பக்கத்தின் மூலம் வேலை தேடுவதையும் அறிவித்துள்ளது.

LinkedIn நிறுவனம் வேலைவாய்ப்பு தளங்களை அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில்,தற்போது இதற்கு போட்டியாக வேலைவாய்ப்பு தளங்களை அறிமுகப்படுத்தி பேஸ்புக் பக்கமும் களம் இறங்கியுள்ளது.

இது குறித்து ஃபேஸ்புக் செய்திதொடர்பாளர் கூறியதாவது, வேலை தேடுவோர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாக பேஸ்புக் செயல்பட வேண்டும் என்பதற்காகவே இந்த தளம் அமைக்கப்படுகிறது.

பல்வேறு சிறு வணிக நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தொடர்பாக தகவல்களை தங்கள் பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி வெளியிடுவதை பார்த்துள்ளோம்.

இதனால், வேலை தேடுவோர்களின் நலனை அடிப்படையாக் கொண்டு ஃபேஸ்புக் பேஜ் அட்மின்களை உருவாக்கியுள்ளோம். அதில் இனி வேலை வாய்ப்புகளை பற்றி அறிவிக்கலாம். வேலைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது, இந்த தளம் சோதனைக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply