வீட்ல புலி வெளியில எலி இதுதான் ஆல்ட்டோவின் நிலைமை

Loading...

%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a4விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து படித்து வருகிறீர்கள். நீங்கள் வைத்திருக்கும் கார் மாடல் இந்த பட்டியலில் இருக்கும்போது சற்று பெருமிதம் ஏற்படுவது இயல்பு. அதேநேரத்தில், ஏற்றுமதி என்று வரும்போது, அந்த கார்களில் பெரும்பாலானவை மிகவும் பின்தங்கி இருக்கின்றன. ஓரிரு மாடல்களை தவிர்த்து, நம் நாட்டில் விற்பனையில் சொதப்பி வரும் பல மாடல்கள் ஏற்றுமதியில் அசத்தி வருகின்றன. அவ்வாறு, கடந்த மாதத்தில் ஏற்றுமதியில் டாப் 10 இடங்களை பிடித்த மாடல்களை இப்போது காணலாம்.
10. மாருதி ஆல்ட்டோ
விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 மாடல் மாருதி ஆல்ட்டோ கார். ஆனால், ஏற்றுமதியில் 10வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 1,989 ஆல்ட்டோ கார்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. வீட்ல புலி, வெளியில எலி என்ற நிலைமையில் ஆல்ட்டோ இருக்கிறது.
09. மாருதி பலேனோ
கடந்த மாதம் மாருதி பலேனோ கார் 9வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 2,215 பலேனோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பலேனோ கார் வெளிநாடுகளில் சுஸுகி பிராண்டில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் மாருதி பலேனோ கார் 9வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 2,215 பலேனோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பலேனோ கார் வெளிநாடுகளில் சுஸுகி பிராண்டில் விற்பனை செய்யப்படுகிறது.
08. செவர்லே பீட்
இந்தியாவில் மிக சொற்பமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் செவர்லே பீட் கார் 8வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதததில் 2,834 பீட் கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.
07. ஹூண்டாய் எக்ஸென்ட்
காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் சுமாரான விற்பனையை பதிவு செய்து வரும் ஹூண்டாய் எக்ஸென்ட் கார் கடந்த மாதம் ஏற்றுமதி நிலவரப்படி 7வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் 2,502 ஹூண்டாய் எக்ஸென்ட் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
06. ஃபோர்டு ஃபிகோ
கடந்த மாதம் ஃபோர்டு ஃபிகோ கார் 6வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் 3,417 ஃபிகோ கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பான கார் என்பதும், சிறந்த கட்டமைப்பு வலு பெற்றிருப்பதும் வெளிநாடுகளிலும் ஃபோர்டு ஃபிகோ காருக்கு நல்ல வரவேற்பை பெற்ற தந்து வருகிறது.
05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10
உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, ஏற்றுமதியிலும் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார். கடந்த மாதத்தில் 4,281 கிராண்ட் ஐ10 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. டிசைன், வசதிகள், தரத்தில் சிறப்பாக இருப்பதே வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதற்கு காரணம்.
04. ஹூண்டாய் க்ரெட்டா
ஏற்றுமதியிலும் கலக்கி வருகிறது ஹூண்டாய் க்ரெட்டா. கடந்த மாதம் 5,602 க்ரெட்டா கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், எஞ்சின் ஆப்ஷன், வசதிகள் என பல விதங்களில் பணத்திற்கு மதிப்பு மிக்க காராக பார்க்கப்படுகிறது.
03. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ
சர்வீஸ் நெட்நொர்க் சரியில்லை, பராமரிப்பு அதிகம் என்று நாம் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு சமரசம் செய்து கொண்டாலும், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ சிறந்த மாடல் என்பதற்கு அதன் ஏற்றுமதி எண்ணிக்கை சிறந்த சான்று. கடந்த மாதத்தில் 5,776 வென்ட்டோ கார்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம், ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.
02. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 6,253 ஈக்கோஸ்போர்ட எஸ்யூவிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. அருமையான டிசைன், வசதிகள், விலை ஆகியவற்றில் தன்னிறவை தருகிறது.
01. நிசான் மைக்ரா
ஏற்றுமதியில் நம்பர்-1 மாடல் நிசான் மைக்ரா கார்தான். கடந்த மாதத்தில் 6,807 நிசான் மைக்ரா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், தொடர்ந்து ஏற்றுமதியில் இந்தியாவின் நம்பர்-1 மாடலாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், இந்தியாவில் நிசான் மைக்ரா காரின் விற்பனை மிகவும் பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply