வீட்டில் தனிமைச் சிறையில் வாடும் சூப்பர் ஸ்டாரின் ஹீரோயின்

Loading...

நடிகை தேவிகாவின் மகள் கனகா கரகாட்டக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதற்கு பின்பு பெரிய ஹீரோக்களுடன் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவருடைய அப்பா தேவிகா மற்றும் கனகாவை விட்டு சென்றுவிட்டதால் கனகாவை அவரது அம்மா ரொம்பவும் செல்லமாக வளர்த்தார்.

%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d

ஆனால் தேவிகா இறந்து போன பிறகு கனகா செய்வதறியாது தவித்து வந்தார். அப்போது திரும்பி வந்த கனகாவின் அப்பா தேவதாஸ் சொத்துக்கு ஆசைப்பட்டு கனகாவை டார்ச்சர் செய்ய தொடங்கினார். அதிலிருந்து நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை கனகா தற்போது தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். தன்னுடைய அப்பாவால் தான் ஆண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு திருமணம் வேண்டாம் என்று தனியாக வசித்து வருவதாகவும், ஆனால் அவர் தொடர்ந்து பணத்திற்கு ஆசைப்பட்டு தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீட்டில் தனிமையை தவிர்ப்பதற்காக 35 பூனைகளை வளர்க்கிறார். நாய், கோழி இவற்றுடன் வசித்தால் தனிமை உணர்வு வராது என்பதால் அவற்றை தன்னுடன் வளர்த்து வருகிறார். மேலும் சில நடிகர், நடிகைகளிடம் பேச முயற்சித்ததாகவும், ஆனால் எவரும் தன்னுடன் பேச தயாராக இல்லை என்றும் நடிகை கனகா தெரிவித்துள்ளார். ஒரு வெற்றிப்பட நாயகி தற்போது தனிமைச்சிறை போன்ற வீட்டில் இருப்பது பெரிய கொடுமையாகும்

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply