விற்பனை வருவாய் அடிப்படையில் இந்தியாவின் டாப் 10 கார் மாடல்கள்

Loading...

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88மாதாமாதம் விற்பனை அடிப்படையில் இந்தியாவின் டாப் 10 கார்கள் மற்றும் டாப் 10 நிறுவனங்கள் குறித்த செய்தித் தொகுப்புகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்து வருகிறீர்கள். ஆனால், இந்த செய்தித் தொகுப்பு சற்று வித்தியாசமாக அமையும் என்று நம்புகிறோம். ஆம், விற்பனையின் மூலமாக அதிகம் வருவாய் ஈட்டும் இந்தியாவின் டாப் 10 கார்கள் குறித்தத் தகவல்களை இங்கே காணப்போகிறோம். ஒவ்வொரு காரின் டாப் வேரியண்ட்டின் விலை அடிப்படையில், அதன் ஜூன் மாத விற்பனை எண்ணிக்கையை பெருக்கி வரும் கூடுதல் தொகையின் அடிப்படையில் டாப் 10 கார்கள் பற்றிய விபரங்களை காணப் போகிறோம். இந்த டாப் 10 கார்களில் மாருதியே ஆதிக்கம் செலுத்தினாலும், முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. அப்படியானால், அந்த முதலிடத்தை பிடித்து வைத்திருக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து காணலாம்.
10. ரெனோ க்விட்
கடந்த ஜூன் மாதம் 9,459 ரெனோ க்விட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதன் டாப் வேரியண்ட்டின் விலையுடன், பெருக்கினால் கடந்த மாதத்தில் ரூ.338 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது ரெனோ க்விட். விலை குறைவான சிறந்த பட்ஜெட் கார் என்பதாலேயே, மாருதி, ஹூண்டாய் போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே ஆட்சி செய்கிற இந்த டாப் 10 பட்டியல் எனும் கோட்டைக்குள் ரெனோ க்விட்டும் இடம்பெற்று அசத்தியிருக்கிறது.
09. மாருதி ஆல்ட்டோ
கடந்த ஜூன் மாதம் 15,750 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அதன்படி, கடந்த ஜூனில் ரூ.510 கோடிக்கு ஆல்ட்டோ கார் மூலமாக வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது. விற்பனை அடிப்படையில் இதுதான் இந்தியாவின் நம்பர்1 கார் மாடல் என்பதாக இருந்தாலும், விற்பனை மதிப்பு அடிப்படையில் 9வது இடத்தை பிடித்துள்ளது.
08. மாருதி பலேனோ
கடந்த ஜூன் மாதத்தில் 6,967 மாருதி பலேனோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதன்படி பார்த்தால், கடந்த ஜூனில் ரூ.530 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது பலேனோ கார். பிரிமியம் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் முன்னிலை வகித்தாலும், இங்கு எலைட் ஐ20 காரிடம் பின்தங்கியிருக்கிறது.
07. மாருதி வேகன் ஆர்
மாருதி நிறுவனத்திற்கு ஸ்திரமான பங்களிப்பை அசராமல் வழங்கி வருகிறது மாருதி வேகன் ஆர் கார். கடந்த ஜூன் மாதத்தில் 11,962 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியிருக்கிறது. அதன்மூலமாக, ரூ.557 கோடிக்கு வருவாய் ஈட்டியிருக்கிறது.
06. மாருதி ஸ்விஃப்ட்
கடந்த ஜூன் மாதத்தில் 9,033 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியிருக்கிறது. ஸ்விஃப்ட் கார் மூலமாக ரூ.582 கோடியை மாருதி வருவாயாக ஈட்டியிருக்கிறது.
05. ஹூண்டாய் எலைட் ஐ20
கடந்த ஜூன் மாதத்தில் 8,990 எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதன்மூலமாக, ரூ.787 கோடியை ஹூண்டாய் மோட்டார்ஸ் வருவாயாக ஈட்டியிருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்திற்கு சிறப்பான வர்த்தகத்தையும், பங்களிப்பையும் வழங்கி வருகிறது.
04. ஹூண்டாய் கிராண்ட் ஐ10
கடந்த ஜூனில் 12,678 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதன்மூலமாக, ரூ.824 கோடியை ஹூண்டாய் வருவாயாக பெற்றிருக்கிறது. பட்ஜெட் கார் மார்க்கெட்டில் தன்னிறைவான மாடல் இந்த கிராண்ட் ஐ10.
03. ஹூண்டாய் க்ரெட்டா
எஸ்யூவி மார்க்கெட்டில் சக்கை போடு போட்டு வரும் ஹூண்டாய் க்ரெட்டா மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. கடந்த ஜூனில் 7,700 க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனையாதன் மூலமாக, ரூ.952 கோடியை ஹூண்டாய் வருவாயாக ஈட்டியிருக்கிறது.
02. மாருதி டிசையர்
மாருதியின் வர்த்தகத்தின் ஆணிவேராக மாருதி டிசையர் விளங்குகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 15,560 டிசையர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதன்மூலமாக, ரூ.1,103 கோடியை வருவாயாக ஈட்டித் தந்துள்ளது.
01. டொயோட்டா இன்னோவா
விற்பனை வருவாயில் இந்தியாவின் நம்பர் 1 கார் மாடல் டொயோட்டா இன்னோவாதான். கடந்த ஜூன் மாதத்தில் 8,171 டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனையானதன் மூலமாக, ரூ.1,449 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது டொயோட்டா.

ஜூலையில் அதிகம்
ஜூன் மாதத்தில் மாருதி கார் ஆலைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூலை மாதம் மாருதியின் விற்பனை மீண்டும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. எனவே, அந்த கார்களின் விற்பனை வருவாயும் வெகுவாக அதிகரித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply