விற்பனையில் விஸ்வரூபம் எடுக்கும் ஃபோர்டு மஸ்டங் ஜிடி ஸ்போர்ட் கார்

Loading...

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8eஃபோர்டு நிறுவனம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மஸ்டங் ஜிடி என்ற ஸ்போர்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அந்த மாடல் நிகழாண்டு தொடக்கத்தில் மோட்டார் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட போதே, அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. பெரும்பாலானோர் அந்தக் காருடன் செல்ஃபி எடுத்துச் சென்றதே அதற்கு சான்று. அப்படி ஒரு கிரேஸ் நிறைந்த மஸ்டங் ஜிடி கார் விற்பனையில் சக்கைப் போடு போட்டு வருவதுதான் இப்போதைய டாக் ஆஃப் த சிட்டி. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 35 கார்கள் விற்பனையாகியுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதே செக்மெண்டில் உள்ள கார்கள் எல்லாம் ஆண்டுக்கு 5-இல் இருந்து 10 வரை விற்பனையானாலே ஆச்சரியமான விஷயமாம். ஆக மொத்தத்தில் மஸ்டங் ஜிடியின் மகத்தான வெற்றியால் ஃபோர்டு நிறுவனம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்துள்ளது. 5.0 லிட்டர் வி – 8 எஞ்சின் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. அது 395 பிஎச்பி முறுக்கு விசை மற்றும் 515 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மொத்தம் 6 கியர்கள், ஆட்டோமேடிக் ஆப்ஷனுடன் வழங்கப்பட்டுள்ளன. காரை எடுத்த 4 விநாடிகளுக்குள் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிப் பிடிக்கும் திறன் கொண்ட வண்டியாக மஸ்டங் ஜிடி உள்ளது. இதைத்தவிர, பல்வேறு நவீன தொழில்நுட்ப உத்திகளும் அந்த மாடலில் புகுத்தப்பட்டுள்ளன. காரின் அதிகபட்ச வேக அளவு மணிக்கு 250 கிலோ மீட்டராகும். இந்திய மார்க்கெட்டில் ரூ.65 லட்சத்துக்கு இந்த கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மஸ்டங் ஜிடி கார்கள் மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அடர் கருப்பு, சில்வர், ஆக்ஸ்போர்டு வெண்மை, மஞ்சள், அடர் சிகப்பு, மேக்னெடிக் உள்ளிட்ட நிறங்களில் அவை விற்பனைக்கு வந்துள்ளன.19 இன்ச் வீல்கள், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட சர்ரவுண்டிங் சிஸ்டம், வெப்பநிலை கட்டுப்பாட்டுக் கருவி, பின்புறத்தில் எல்இடி விளக்குகள் என பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது மஸ்டங் ஜிடி மாடல். கடந்த ஆண்டு முதற்பாதியில் உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட் காராக மஸ்டங் ஜிடி இருந்தது. தற்போது இந்தியாவின் ஸ்போர்ட் கார் விற்பனையிலும் அந்த மாடல் முதலிடம் பிடித்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்துக்கு டிரைவ் ஸ்பார்க்கின் வாழ்த்துக்கள்…

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply