விற்பனையில் டாப் 10 பைக் மாடல்கள் தொட முடியா உயரத்தில் ஹீரோ ஸ்பிளென்டர்

Loading...

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-10-%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%beபைக் மார்க்கெட் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சந்தைப் போட்டியால் நெருதுளி பட்டு வருகிறது. சந்தைப் போட்டியை தாண்டியும் சில தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் டாப் 10 பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக, முதல் 4 இடங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளின் ஆதிக்கத்தால் நிரம்பி இருக்கிறது. கடந்த மாத விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த டாப் 10 மோட்டார்சைக்கிள் மாடல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
10. பஜாஜ் பிளாட்டினா
கடந்த மாதத்தில் பஜாஜ் பிளாட்டினா பைக் 10வது இடத்தை பிடித்திருக்கிறது. குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் பைக் மாடல் என்பதால் வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த மாதத்தில் 29,163 பஜாஜ் பிளாட்டினா பைக் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.
09. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350
இந்தியர்களின் இலட்சிய மோட்டார்சைக்கிள் மாடல்களாக ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகள் விளங்குகின்றன. அதில், கம்பீரம் நிறைந்த ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் விற்பனையிலும் சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த மாத டாப் 10 பட்டியலில் 9வது இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த மாதத்தில் 32,971 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி உள்ளன.
08. பஜாஜ் பல்சர் 150
கடந்த மாதத்தில் 8வது இடத்தை பஜாஜ் பல்சர் 150 பைக் பெற்றிருக்கிறது. அசத்தலான டிசைன், பெர்ஃபார்மென்ஸ், தோதான விலை போன்றவை இந்த பைக்கிற்கு தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளது. கடந்த மாதத்தில் 33,815 பஜாஜ் பல்சர் 150 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.
07. டிவிஎஸ் அப்பாச்சி
பஜாஜ் பல்சர் போன்றே இந்தியாவின் இளம் வாடிக்கையாளர்களின் கனவு பைக் பிராண்டாக டிவிஎஸ் அப்பாச்சி விளங்குகிறது. கடந்த மாதத்தில் 35,832 அப்பாச்சி பைக்குகள் விற்பனையாகி உள்ளன. செயல்திறன், விலை போன்றவை இதற்கு பக்கபலமாக இருக்கின்றது.
06. பஜாஜ் சிடி100
அதிக மைலேஜ் தரும் பைக் மாடல்களில் முன்னிலை வகிக்கும் பஜாஜ் சிடி100 விற்பனையிலும் அசத்தி வருகிறது. கடந்த மாதத்தில் 44,599 பஜாஜ் சிடி100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. குறைவான விலையில் நிறைவான போக்குவரத்து சாதனம்.
05. ஹோண்டா சிபி ஷைன்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது ஹோண்டா சிபி ஷைன். கடந்த மாதத்தில் 63,606 ஷைன் பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. அருமையான டிசைன், வசதியான இருக்கை அமைப்பு, சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் போன்றவை இந்த பைக்கிற்கான வரவேற்பை தொடர்ந்து தக்க வைத்து வருகின்றது.
04. ஹீரோ கிளாமர்
பட்டியலில் 4வது இடத்தில் ஹீரோ கிளாமர் பைக் இருக்கின்றது. கடந்த மாதத்தில் 74,693 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றது. பெயருக்கு ஏற்றாற்போல் கவர்ச்சியும், அதிக மைலேஜும் இந்த பைக்கிற்கு தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பெற்று தந்து வருகிறது.
03. ஹீரோ பேஷன்
ஆரம்ப நிலை பைக் மார்க்கெட்டில் மிகச் சிறப்பான தோற்றமுடைய பைக் மாடல். அத்துடன் ஸ்மூத்தான எஞ்சின், சரியான விலை போன்றவை இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்து வருகிறது. கடந்த மாதத்தில் 77,851 பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.
02. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்
பட்ஜெட் விலையில் பாங்கான தோற்றமுடைய பைக் மாடல் ஹீரோ டீலக்ஸ். கடந்த மாதத்தில் 1,27,752 டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. அதிக மைலேஜ் மற்றும் ஸ்மூத்தான எஞ்சின் போன்றவை இதற்கு வலு சேர்க்கும் இதர அம்சங்கள்.
01. ஹீரோ ஸ்பிளென்டர்
நீண்ட காலமாக பைக் மார்க்கெட்டின் ராஜாவாக இருந்து வருகிறது ஹீரோ ஸ்பிளென்டர். சிறப்பான டிசைன், அதிர்வுகள் குறைந்த எஞ்சின், அதிக மைலேஜ், சரியான விலை போன்றவை ஸ்பிளென்டருக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி விட்டது. எந்தவொரு பைக் மாடலும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறது ஸ்பிளென்டரின் விற்பனை. கடந்த மாதத்தில் 2,29,061 ஸ்பிளென்ர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. மறு விற்பனை மதிப்பிலும் சிறப்பான மாடல். முற்றும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply