விற்பனையில் டாப் 10 எஸ்யூவி மாடல்கள் க்ரெட்டா பிரெஸ்ஸா இடையே கடும் போட்டி

Loading...

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-10-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%b5கம்பீரமான தோற்றம், அதிக தரை இடைவெளி, நல்ல மைலேஜ் போன்றவை எஸ்யூவி ரக கார்கள் பக்கம் இந்தியர்களை திரும்பச் செய்திருக்கிறது. இதனால், எஸ்யூவி கார்களின் விற்பனை மிகச்சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, படஜெட் போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு பல புதிய எஸ்யூவி மாடல்களை கார் நிறுவனங்கள் வரிசை கட்டி வருகின்றன. இதனால், சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்த கடும் போட்டியையும் சமாளித்து விற்பனையில் சக்கை போடும் டாப் 10 எஸ்யூவி மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம்.
10. மஹிந்திரா டியூவி300
கடந்த மாதம் எஸ்யூவி ரக மார்க்கெட்டில் விற்பனையின்படி, 10வது இடத்தை பிடித்திருக்கிறது மஹிந்திரா டியூவி300. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த எஸ்யூவி மாடலின் வேறுபட்ட வடிவமைப்பு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
09. ரெனோ டஸ்ட்டர்
கடந்த மாதம் 1,945 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. காம்பேக்ட் ரகத்தில் களமிறங்கி கலக்கிய டஸ்ட்டரின் விற்பனை போட்டியாளர்களால் நெருக்கடிக்கு ஆளானாலும், ஓரளவு நல்ல விற்பனை பங்களிப்பை ரெனோவுக்கு கொடுத்து வருகிறது.
08. மஹிந்திரா எக்ஸ்யூவி500
அறிமுகம் செய்யப்பட்டது முதல் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது. கடந்த மாதத்தில் 2,288 எக்ஸ்யூவி500 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. அசத்தலான டிசைன், வசதிகள், எஞ்சின் ஆகியவை இதனை மீதான வசீகரத்துக்கு காரணங்கள்.
07. ஹோண்டா பிஆர்வி
மார்க்கெட்டில் சமீபத்திய வரவான ஹோண்டா பிஆர்வி 7வது இடத்தை பிடித்திருக்கிறது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் இருக்கும் முழுமையான 7 சீட்டர் மாடல் என்பதுதான் இதன் மிக முக்கிய சிறப்பம்சம். கடந்த மாதத்தில் 3,064 பிஆர்வி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. ஹோண்டா தயாரிப்புகள் மீதான நம்பகத்தன்மையும் இதன் விற்பனைக்கு பக்கபலம்.
06. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
இந்தியாவின் மிக வெற்றிகரமான எஸ்யூவி மாடல். கடந்த மாதத்தில் 3,366 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் விற்பனையாகி 6வது இடத்தில் உள்ளது. டிசைன், வசதிகள், செயல்திறன், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது.
05. மஹிந்திரா கேயூவி100
எஸ்யூவி ரகத்தில் அனைத்து விலை ரகத்திலும் மாடல்களை நிலைநிறுத்தியிருக்கும் மஹிந்திராவின் விலை குறைவான எஸ்யூவி மாடல். மேலும், 6 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் கிடைப்பதும் இதன் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 3,543 கேயூவி100 எஸ்யூவிகள் விற்பனையாகியிருக்கின்றன.
04. மஹிந்திரா பொலிரோ இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலாக விளங்கிய மஹிந்திரா பொலிரோ, போட்டியாளர்களால் சிறிது பின்தங்கி 4வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 3,699 பொலிரோ
எஸ்யூவிகல் விற்பனையாகியிருக்கின்றன. கட்டுறுதி, குறைவான விலை, இடவசதி என வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
03. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கான மவுசு குறையவில்லை. கடந்த மாதத்தில் 4,609 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனையாகியிருக்கின்றன. அருமையான டிசைன், வசதிகள், மைலேஜ், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் என வாடிக்கையாளர்களை தொடர்ந்து வசீகரித்து வருகிறது.
02. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா
இந்தியர்கள் அதிகம் விரும்பும் எஸ்யூவி ரகத்தில் விலை குறைவாக மாருதி களமிறக்கிய விட்டாரா பிரெஸ்ஸா மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை 95,000 பேர் முன்பதிவு செய்துள்ளனராம். கடந்த மாதத்தில் மட்டும் 6,673 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி டெலிவிரி கொடுத்திருக்கிறது. குறைவான பராமரிப்பு, அதிக மைலேஜ் போன்றவை இதனை கவரும் காரணங்கள்.
01. ஹூண்டாய் க்ரெட்டா
டிசைனில் நெஞ்சை கொள்ளை கொள்ளும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. கடந்த மாதம் 7,700 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. விற்பனையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சரியான விலையில் கிடைக்கும் பிரிமியம் கார் அந்தஸ்தை இதன் தோற்றம் தருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply