வாழைக்காய் சாம்பார்

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d
தேவையானவை:
வாழைக்காய் – ஒன்று, சின்ன வெங்காயம் – 6, வேகவைத்த துவரம்பருப்பு – கால் கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
புளியைக் கரைத்து கடாயில் விட்டு உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, சேர்த்து, ஒரு கொதி வரும்போது… சின்ன வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காயை எண்ணெயில் வதக்கி சேர்க்கவும். காய் வெந்ததும், வெந்த துவரம்பருப்பைச் சேர்த்து மீண்டும் இரண்டு கொதி வந்ததும் இறக்கி… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply