வாழைக்காய் எரிசேரி

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf

தேவையானவை:
வாழைக்காய் – ஒன்று, சேனைக்கிழங்கு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 3, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், துருவிய தேங்காய் – கால் கப், தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதியளவு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்துகொண்டிருக்கும் காய்களுடன் சேர்க்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மீதம் இருக்கும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி, வெந்த காய்களில் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த எரிசேரி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply