வாரம் ஒருமுறை வாழைப்பழத்தை பீர் சேர்த்து பிசைந்து தலைக்கு போட்டால் ஏற்படும் அதிசயம்

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8dஇருபாலருக்கும் தலைமுடி பிரச்சனை பெரும் தலைவலியாக உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து பராமரிப்பு கொடுக்காமல் இருந்தால், அது அழகிற்கே உலை வைத்துவிடும். தலைமுடி உதிர்வைத் தடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

தலைமுடி உதிர்வைத் தடுக்க 50-க்கும் மேற்பட்ட இயற்கை நிவாரணிகள் உள்ளன. இங்கு அதில் மிகவும் சக்தி வாய்ந்த ஓர் அற்புதமான ஹேர் மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த நேச்சுரல் ஹேர் மாஸ்க் குறித்து காண்போம்.தேவையான பொருட்கள்:

முட்டையின் மஞ்சள் கரு – 1
வாழைப்பழம் – 1/2
பீர் – 1/2 கப்


தயாரிக்கும் முறை:

மிக்ஸியில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஹேர் மாஸ்க் தயார்!


பயன்படுத்தும் முறை:

தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை தலையில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு/சீகைக்காய் போட்டு , தலைமுடியை நன்கு அலச வேண்டும்.


எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்?

இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை தலைக்கு போட வேண்டும். மேலும் இந்த மாஸ்க்கை முதல் முறை பயன்படுத்தியதுமே தலைமுடி உதிர்வது நிற்பதை நன்கு காணலாம்.


குறிப்பு

இந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தும் போது, நீங்கள் ஏதேனும் ஒருவித வெப்ப உணர்வை உணர்ந்தால், அஞ்ச வேண்டாம். இந்த ஹேர் மாஸ்க் நன்கு வேலை செய்கிறது என்பதை உணர்த்த தான், இம்மாதிரியான உணர்வு ஏற்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply